மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு... 40,000 கன அடியாக உயர்வு... மேலும் அதிகரிக்கும்!!
மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 90 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வினாடிக்கு 40,000 கன அடி தண்ணீர் வீதம் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. காவிரி நீர்பிடிப்புப் பகுதியான குடகு மலைப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முதல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் இன்று மாலை பெரு வெள்ளம் ஏற்படும் என்று மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று மாலை கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 3,625 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று மாலை விநாடிக்கு 6,000 கன அடியாக அதிகரித்து இருந்தது. பின்னர் 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் மட்டும் 1.35 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்து வரும் கன மழையால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளில் இருந்து மேட்டூருக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கபினியில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டது. இது தற்போது 60 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 90 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வினாடிக்கு 40,000 கன அடி தண்ணீர் வீதம் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. இன்று இரவு முதல் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை நிலவரத்தின்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.55 அடியாக உள்ளது. இன்று மட்டும் 1.35 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 120 அடியாகும்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications