Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலம் பனமரத்துப்பட்டி அரசு பள்ளியின் வகுப்பறைக்குள் புகுந்த பாம்பு.. மாணவிக்கு எதிர்பாராத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: தென்மேற்கு பருவ மழை காலம் என்பதால், மழை பெய்யும் ஊர்களில் பாம்புகள் வெளியில் வருகின்றன. பல்வேறு மறைவிடங்களில் இருந்து உணவு தேடி வெளியே வரும் பாம்புகள் சிலருக்கு எமனாகி விடுகின்றன. அண்மையில் தூத்துகுடியில் வாசலில் படுத்திருந்தவர், திண்டுக்கல் செம்பட்டியில் தாத்தா உடன் குடிசையில் தூங்கிய சிறுவனை பாம்புகள் கடித்துள்ளன. அந்த வரிசையில் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் புகுந்த பாம்பு மாணவியை கடித்தது. மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன் என்ற மூன்று வகை பாம்புகளே உயிரிழப்புகளுக்கு காரணமாகஇருக்கின்றன. கண்ணாடி விரியனும், கட்டு விரியனும் இரவில் உணவு தேட வருகின்றன. அப்படி வரும் போது, மனிதர்களை தாக்குகின்றன. அதேபோல் நாகப்பாம்பு உணவு தேட வெளியே வருகிறது.. அதேபோல் மறைந்திருக்கும் இடத்தில் இடையூறு ஏற்படும் போது வெளியே வருகிறது. அப்படி வெளியில் வரும் போது, எதிரில் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணரும் நாகப்பாம்பு தாக்கி விடுகிறது. சேலத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

What did the cobra that entered the Salem Government School classroom do to the student

சேலம் பள்ளியில் பாம்பு

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று மாலை 3 மணி அளவில் பள்ளி இடைவேளையின் போது 9-ம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையின் முன்பு விளையாடி கொண்டு இருந்தார்கள்.

அப்போது திடீரென வகுப்பறையில் பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வகுப்பறையில் இருந்து கூச்சலிட்டபடி வெளியே ஓடினர். அப்போது மாணவி ஒருவரை பாம்பு கடித்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆசிரியர்கள் விரைந்து வந்து பாம்பை அடித்தனர். பின்னர் பாம்பு கடித்த மாணவியை ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு மாணவிக்கு டாக்டர்கள் முதலுதவி அளித்தனர். பின்னர் மாணவி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வகுப்பறையில் மாணவியை பாம்பு கடித்த சம்பவம் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் குடிசையில் பாம்பு

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் கடந்த இரண்டு நாள் முன்பு பாம்பு கடித்து சிறுவன் இறந்துள்ளான். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே இருக்கிறது வேலகவுண்டன்பட்டி கிராமத்தில் பீமராஜ் கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். அவருடைய மனைவி ரேவதி (40). இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் கண்ணன் என்ற மகனும், 2 வயதில் சந்தானம் என்ற மகனும் உள்ளனர். இதில், கண்ணன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தான். செம்பட்டி அருகே வீ.கூத்தம்பட்டியில் ரேவதியின் தந்தை தங்கவேலின் வீடு இருக்கிறது. தங்கவேல் தனது வீட்டை இடித்துவிட்டு, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டி வந்தார். இதனால் வீட்டின் அருகே குடிசை அமைத்து, அதில் தங்கவேல் தங்கி இருக்கிறார்.

இந்தநிலையில் குழந்தை கண்ணன், தனது தாத்தா வீட்டுக்கு சென்றான். கடந்த இரண்டு நாள் முன்பு இரவு தங்கவேல், கண்ணன் ஆகியோர் குடிசை வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளார்கள். நள்ளிரவில் திடீரென கண்ணன் அலறினான். அந்த சத்தம் கேட்டு தங்கவேல் திடுக்கிட்டு எழுந்திருக்கிறார். சிறிதுநேரத்தில் கண்ணனின் வாயில் இருந்து நுரை தள்ளியது. இதனால் கண்ணனை, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கொடிய விஷம் கொண்ட பாம்பு கண்ணனை கடித்திருப்பதாக கூறினார்கள், தொடர்ந்து அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் கண்ணன் பரிதாபமாக இறந்தான்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+