• search
சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நைட்" ஆனா போதும்.. புழுவாய் துடிதுடித்த இளம் மனைவி.. ரூமெல்லாம் சிதறி கிடந்த "தடயம்".. என்னாச்சு?

Google Oneindia Tamil News

சேலம்: கோபித்து கொண்டு போன மனைவியை அப்போதுதான் அழைத்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார் கணவன்.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம், இப்படி ஒரு பகீர் காரியம் நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை..!

சேலம் சூரமங்கலம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் தியாகலிங்கம்... இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு தனஸ்ரீயா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.

ஒரே மகள் தனஸ்ரீயாயை, இன்ஜினீயருக்கு படிக்க வைத்துள்ளனர்.. அதே பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ் என்பவருக்கு கடந்த 2019ல் திருமணமும் செய்து கொடுத்துள்ளனர்... கீர்த்திராஜ்க்கு 31 வயதாகிறது.. கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

வேறுபாடுகள்

வேறுபாடுகள்

கணவன், மனைவி இருவரும் ரெட்டிப்பட்டியில் தனியாக வசித்து வந்தனர்.. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன.. அவ்வப்போது கணவன் மனைவி இடையே தகராறுகள் வெடித்து வந்துள்ளன.. வாய் வார்த்தையாக நடந்து கொண்டிருந்த சண்டை, ஒருகட்டத்தில் தாக்குதல் அளவுக்கு சென்றுவிட்டது.. மனைவியை கண்மூடித்தனமாக அடித்து வந்துள்ளாராம் கீர்த்திராஜ்.. அப்படித்தான், கடந்த 10 நாட்களுக்கு முன்பும் வழக்கம்போல் சண்டை நடந்துள்ளது.

 உச்சக்கட்ட வெறுப்பு

உச்சக்கட்ட வெறுப்பு

வழக்கம்போல், மனைவியை அடித்து தாக்கியுள்ளார்.. இதில் உடம்பெல்லாம் காயமடைந்த தனஸ்ரீயா, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு சென்றுவிட்டது.. அதற்கு பிறகு மனம்வெறுத்து போனவர், அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்... இந்நிலையில், ஒருவாரம் மனைவி என்ன ஆனார் என்றுகூட எட்டிப்பார்க்காத நிலையில், நேற்று முன்தினம், மாமியார் வீட்டுக்கு சென்றிருக்கிறார் கீர்த்திராஜ்.. குடும்பம் நடத்த வருமாறும் அவரை அழைத்துள்ளார்.. முதலில் தனஸ்ரீயா மறுத்துள்ளார்.. ஆனால், விடாமல் சமாதானம் செய்துள்ளார் கீர்த்திராஜ்.. இனி அப்படியெல்லாம் தகராறு, சண்டை வராது என்று உறுதி தந்து, தன் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

 காயங்கள் - ரத்தம்

காயங்கள் - ரத்தம்


ஆனால், கொஞ்ச நேரத்திற்கெல்லாம், அதாவது இரவு 10 மணிக்கு, தனஸ்ரீயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, தனஸ்ரீயாவின் பெற்றோருக்கு போன் வந்துள்ளது.. இதனால் பதறிப்போன பெற்றோரும், உறவினர்களுக்கும் அலறி அடித்துக் கொண்டு, தனஸ்ரீயாவின் வீட்டுக்கு வந்தனர்.. அங்கே தனஸ்ரீயாவின் உடம்பில் காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த ரூம் முழுக்க ரத்தம் சிதறி கிடந்ததாம்.. தனஸ்ரீயாவின் தலையில் வெட்டுக்காயங்களும் இருந்துள்ளன.. உடம்பில் பல்வேறு இடங்களில் தாக்கிய காயங்களும் இருந்ததை கண்டு, அவரது அம்மாவும், அப்பாவும் கதறி கதறி அழுதார்கள்.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

தங்கள் மகளை திட்டமிட்டு அழைத்து சென்று, சித்ரவதை செய்து அடித்து தூக்கில் தொங்க விட்டுள்ளதாக போலீசாரிடம் புகார் தந்தனர்.. அதன்பேரில் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. இந்த ரிசல்ட் வந்தால்தான், முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறும் என்பதால், தனஸ்ரீயாவின் சாவு, சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு விசாரணையை துவக்கினர். மேலும், தனஸ்ரீயாக்கு கல்யாணம் நடந்து 3 வருடங்களே ஆவதால் சேலம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்...

 கிரிக்கெட் மட்டை

கிரிக்கெட் மட்டை

மகளின் மரணம் குறித்து பெற்றோர் சொல்லும்போது, "வீடு முழுவதும் ரத்தக்கரை இருந்தது.. அங்கிருந்த கிரிக்கெட் மட்டையில் கூட ரத்தம் படிந்திருந்தது.. அந்த கிரிக்கெட் மட்டையால் மகளை அடித்து கொன்றிருக்கிறார்கள்.. கல்யாணம் ஆன ஒருசில மாதத்திலேயே, ஆடி கார் வேண்டும் என்று மகளை கொடுமைப்படுத்தி வந்தனர்.. அப்பறம் வரதட்சணை போதவில்லை, இன்னும் வேண்டும் என்று கேட்டு அதற்கும் கொடுமைப்படுத்தி வந்தனர்.. கல்யாணம் ஆகி 3 மாசம்தான் அவள் நிம்மதியாக இருந்திருப்பாள்.. அதுக்கப்பறம் இரவெல்லாம் சித்திரவதைதான்.. இந்த வாழ்க்கையே வேணாம்ம்மா என்று எங்களிடம் சொல்லி சொல்லி அழுதாள்.. சமாதானம் பேசுவது மாதிரி பேசி, இப்படி கூட்டிட்டு போய் அடிச்சு கொன்னுட்டாங்களே" என்று அழுதுகொண்டே சொன்னார்கள்.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

இதனிடையே, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், தனஸ்ரீயாவை, தாக்கியதால்தான் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த போலீசார், கீர்த்திராஜிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.. இறுதியில், தனஸ்ரீயாவை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்டதாக வாக்குமூலம் தந்ததையடுத்து, அவரை இப்போது கைது செய்துள்ளனர்.. இப்படித்தான், கேரளாவிலும், விஸ்மயா கேஸ் இப்படித்தான் நடந்தது.

 விஸ்மயா

விஸ்மயா

வரதட்சணை கொடுமையால், விஸ்மயா என்ற இளம்பெண்ணை, கணவர் கிரண்குமார் அடித்து நொறுக்கினார்.. உடம்பெல்லாம் கட்டையால் அந்த பெண்ணை தாக்கினார்.. ஆணியால் குத்தி சித்ரவதை செய்துள்ளார்.. இந்த விஷயம் எல்லாம் பெற்றோரிடம் சொல்லி பலமுறை அழுதிருக்கிறார் விஸ்மயா.. இறப்புக்கு முந்தையநாள்கூட, தேர்வுக்கு தன்னை கணவன் அனுமதிக்கவில்லை என்று, சொல்லி விஸ்மயா அழுதுள்ளார்..

 ஆணிகள் - சித்ரவதை

ஆணிகள் - சித்ரவதை

ஆனால், விஸ்மயா கழுத்தில் ஆழமான காயங்களே, கிரண்குமாரை சிக்க வைத்தது.. இப்போது குற்றவாளி என கோர்ட்டில் தீர்ப்பாகி தண்டனையும் தரப்பட்டுவிட்டது.. இந்த தண்டனையானது, வரதட்சணை கொடூரங்களுக்கு எல்லாம் இனி நிச்சயம் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்றும் நம்பப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு பெண் அநியாயமாக அடித்து தொங்கவிட்டுள்ளது, சில மனித உறவுகளின் மீதான அடிப்படை நம்பிக்கையைகூட, குலைத்துவிடுகிறது..!

English summary
what happened to salem engineer and husband arrested due to murder case வரதட்சணை கொடுமையால் மனைவியை அடித்து கொன்ற கணவர் கைதாகி உள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X