ஏற்காடு மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் விழுந்த பஸ்.. விபத்துக்கு உண்மையான காரணம் இதுதான்!
சேலம்: செல்லம் நோக்கி ஏற்காடு மலைப்பாதையில் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒரு சிறுவன் உள்பட 6 பேர் பலியான சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்திற்கு உண்மையான காரணம் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது மரணம் அடைந்தார். 65க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அனுபவம் மிக்க ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர் என்று காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
போலீசார் தகவல்: ஏற்காட்டில் இருந்து சேலத்திற்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ், மலைப்பாதையின் 13வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதில் அந்த பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
65 பேர் இதில் உடல் முழுக்க கடுமையாக காயம் அடைந்தனர். 50 அடி பள்ளத்திற்குள் பஸ் விழுந்ததில் அதில் இருந்த பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
13-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, வேகமாக வந்ததால் தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாக பேருந்து கவிழ்ந்தது. ஏற்காடு பேருந்து விபத்திற்கு அதிவேகமாக சென்றதே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மிக வேகமாக பேருந்து ஓட்டப்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சென்றுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளரை நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டம் போடப்பட்டு உள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் சில கோணங்களில் விசாரணை செய்யப்பட்டு உள்ளது.
100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் பேருந்து கடுமையாக ஏதம் அடைந்துள்ளது. பேருந்தில் பிரேக் கொஞ்சம் லூஸாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விசாரணையில் பேருந்துக்கான உரிமங்கள் உட்பட அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் விபத்து ஏற்பட அதிவேகமே காரணம் என்று தெரிய வந்துள்ளது.
மலைப்பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக செல்ல வேண்டிய நிலையில், 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை தகவல் வெளியிட்டு உள்ளனர்.
ஏற்காடு மலைப்பகுதியில் 30 கி.மீ. வேகத்திற்கு மேல் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்ச வேகம் 30 கிமீயை தாண்ட கூடாது. அதற்கு மேல் சென்றால் விபத்துகளை தவிர்க்க முடியாது. இதனால் வேகமாக செல்லும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications