பிஜேபிக்கு மானமே போகுதே.. சேலம் விஜயலஷ்மி எங்கே? ஆத்தூரில் அசிங்கப்படும் பிரபலம்.. ஆடியோ வருதே நிஜமா
சேலம்: சேலத்தில் பாஜ மாவட்டத்தலைவர் மீது பாலியல் புகார் அளித்த பெண் நிர்வாகி, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஆடியோ வெளியிட்டு மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சண்முகநாதன்... இவர் மீது திடீர் குற்றச்சாட்டு ஒன்று சமீபத்தில் கிளம்பியது.. அதாவது, நடந்து முடிந்த எம்பி தேர்தலின்போது, கட்சி தலைமை வழங்கிய பணத்தை சண்முகநாதன் சுருட்டிக்கொண்டாராம்.

போஸ்டர்: இது தொடர்பாக கடந்த 1ம் தேதி ஆத்தூர் பகுதியில் நிறைய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சண்முகநாதன், நேராக போலீசுக்கு ஓடினார்...
கட்சியில் தனக்கு எதிராக செயல்படும் சிலர், வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த போஸ்டரை ஒட்டியிருப்பதால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தந்தார்.. பாஜக ஆத்தூர் நகரதலைவரான சுதாகர் என்பவர்தான், சண்முகநாதன் சார்பாக இந்த புகாரை போலீசாரிடம் தந்தார்.
சண்முகநாதன்: இப்படிப்பட்ட சூழலில், நரசிங்கபுரம் நகர பாஜக மகளிரணி செயலாளராக இருந்த அனிதா உள்ளிட்ட சிலரை கட்சியில் இருந்து சண்முகநாதன் நீக்கினார்.. இப்போது, அனிதா, ஆத்தூர் டவுன் போலீசுக்கு சென்று ஒரு புகார் தந்தார்.
அதில், "கடந்த மாதம் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நான் பாமக அலுவலகத்தில் இருந்தேன். அப்போது பாஜக நகர தலைவர் சுதாகர், என்னை மிரட்டி தகாத முறையில் நடந்து கொண்டார். அதை நான் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டேன்.
தகாத முறைகள்: ஆனால், மாவட்ட தலைவரின் மெத்தனபோக்காலும், அவருக்கு வலதுகரமாக இருப்பதாலும் சுதாகர், நரசிங்கபுரம் நகருக்குள் இருக்கும் ஒரு சில பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்கிறார்.. அவர்களை அசிங்கமாகவும் திட்டி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
அனிதா இவ்வாறு புகார் கொடுத்ததுமே, சேலம் கிழக்கு மாவட்ட பாஜக கலை கலாச்சார பிரிவின் மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி என்பவர் இன்னொரு புகாரை சுதாகர் மீது, ஆத்தூர் நகர போலீசில் தந்தார். அடுத்தடுத்து பெண்கள் இப்படி புகார் கொடுக்கவும், ஆத்தூர் போலீசாரும் விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.
பாலியல் புகார்: இப்போது விஷயம் என்னவென்றால், பாலியல் புகார் சொன்ன விஜயலட்சுமியை காணோமாம்.. திடீரென மாயமாகி விட்டாராம்.. அவரது கணவர் ஊரெல்லாம் தேடி வருவதாக சொல்கிறார்கள்..
இப்படிப்பட்ட சூழலில், விஜயலட்சுமி ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார்.. அந்த ஆடியோவில், "என் மீதுள்ள புகாரால் ரொம்ப மனவேதனையில் இருக்கிறேன்.. என் கணவர், குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள்... நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
விஜயலட்சுமி: இப்போது, விஜயலட்சுமியின் கணவர் சுரேஷ்மணி, இந்த ஆடியோவை எடுத்துக் கொண்டு, ஆத்தூர் போலீசுக்கு ஓடினார்.. மனைவியை கண்டுபிடித்து தரவேண்டும் என்று புகார் தந்துள்ளார்.. இப்போது, ஏகப்பட்ட புகார்கள் ஆத்தூர் போலீசாருக்கு குவிந்துவிட்டதால், இது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. மொத்தத்தில் சேலம் பாஜகவில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை...!!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications