சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1 மணி நேரம்! 4 தலைகள்! நைட் ஓபிஎஸ் பேச்சை கேட்டதும்.. அதிகாலையே சீறிய எடப்பாடி! குலுங்கிய நெடுஞ்சாலை

Google Oneindia Tamil News

சேலம்: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் அடைந்துள்ள நிலையில் நேற்று ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஒற்றை தலைமைக்கு எதிராக ஓபிஎஸ் பேட்டி அளித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சேலத்தில் தனது வீட்டில் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறாராம்.

சமீபத்தில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து 20+ மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பேசி உள்ளனர்.

இதை விரும்பாத நிலையில் நேற்று ஒற்றை தலைமைக்கு எதிராக ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்போம் காரசாரமாக பேசினார்.

இது அதுக்கும் மேல! ஜெ.வை விட ஒரு படி மேலே.. எடப்பாடி போடும் மாஸ்டர்பிளான்.. யாரும் வாலாட்ட முடியாது!இது அதுக்கும் மேல! ஜெ.வை விட ஒரு படி மேலே.. எடப்பாடி போடும் மாஸ்டர்பிளான்.. யாரும் வாலாட்ட முடியாது!

ஓபிஎஸ் பேட்டி

ஓபிஎஸ் பேட்டி

ஓபிஎஸ் தனது பேட்டியில் அதிமுகவில் இப்போது நடக்கும் நிகழ்வுகள் மிகப் பெரிய வருத்தம் தருகிறது. அதிமுகவில் இணையும்போது உச்சபட்ச அதிகார பதவியை எதுவும் கேட்டதும் இல்லை. தற்காலிக ஏற்பாடாகவே பொதுச்செயலாளர் பதவியை அன்று சசிகலாவுக்கு கொடுத்தோம். ஜெயலலிதா வகித்த பதவியில் வேறு யாரும் இருக்கவேண்டாம் என்றே இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராகிய என்னிடம் கலந்து பேசாமல் மா.செ.க்கள் கூட்டத்தில் வெளிப்படையாக பேசினர்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

கட்சித் தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளித்து இரட்டைத் தலைமையை ஏற்றுக்கொண்டேன். துணை முதல்வருக்கு அரசியல் சட்டப்படி எந்த அதிகாரமும் இல்லை. பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.நான் துணை முதல்வர் பதவி ஏற்க பிரதமர் மோடிதான் காரணம். அடிப்படை உறுப்பினர்களால் இரட்டை தலைமை நடைமுறைக்கு வந்தது- ஒற்றைத் தலைமை என்பது இப்போது தேவை இல்லை. பொதுச்செயலாளர் பதவி தேவை என ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவர முடியாது என்று ஓ பன்னீர்செல்வம் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில் இரவு ஓபிஎஸ் பேட்டியை கேட்டதும் நேற்றே எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். சேலம் நெடுஞ்சாலை வீட்டில் அவர் தீவிர ஆலோசனை செய்துள்ளார். கொங்கு மண்டல எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சுமார் 2 மணி நேரம் நேற்று இரவு ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அவர் வீடு வாசல் முழுக்க வாகனங்களாக இருந்துள்ளன. ஓபிஎஸ் பேட்டியை முன் வைத்து இதில் ஆலோசனைகள் செய்யப்பட்டுள்ளன.

ஓபிஎஸ் இப்படி சொல்லிட்டாரே

ஓபிஎஸ் இப்படி சொல்லிட்டாரே

அதில் மூத்த சேலம் நிர்வாகி ஒருவர்.. ஓபிஎஸ் என்ன மீண்டும் தர்மயுத்தம் நடத்துகிறாரா? நாம பேசியது வெளியே தெரிய கூடாது என்று தானே போன் கூட அனுமதிக்காமல் இருந்தோம். அவர் என்ன உள்ளே பேசியதை எல்லாம் மீடியாவில் சொல்கிறார். மீண்டும் பிரச்சனை செய்கிறாரா? ஒற்றை தலைமை வேண்டாம் என்றால் அவரே எடப்பாடி அண்ணனிடம் பேசி இருக்கலாமே? அண்ணன் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகத்தானே முதலில் போஸ்டர் ஒட்டினார்கள். அதை தடுத்து இருக்கலாமே.. என்று கடுப்பாகி சொல்லி இருக்கிறார்.

வழிமொழிந்த நிர்வாகிகள்

வழிமொழிந்த நிர்வாகிகள்

நேற்று பல நிர்வாகிகள் இதை வழி மொழிந்து பேசி உள்ளனர். இந்த நிலையில்தான் இரவு கொஞ்ச நேரமே தூங்கிய எடப்பாடி இன்று காலையே மீண்டும் மீட்டிங்கில் இறங்கிவிட்டார். இன்று காலையே எடப்பாடி பழனிசாமி தொடர் சேலத்தில் தனது வீட்டில் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறாராம். அதிகாலையே நெடுஞ்சாலை வீட்டிற்கு நிர்வாகிகள் வந்தனர். ஆனால் பெரிய அளவில் நிர்வாகிகள் இந்த நிகழ்விற்கு வரவில்லை. 4 நிர்வாகிகள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். முக்கிய நிர்வாகிகளை மட்டும் அழைத்து எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆலோசனை செய்து வருகிறார்.

என்ன பேசினார்கள்?

என்ன பேசினார்கள்?

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, எம்பி தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் மோகன் ராமசந்திரன், சேலம் இளங்கோவன் ஆகியோர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 5 மணிக்கு தொடங்கிய மீட்டிங் 6.15 வரை நடந்து உள்ளது. இதில் ஓபிஎஸ் பேட்டி தொடர்பாக எடப்பாடி கொஞ்சம் கோபமாக பேசியதாகவும், சசிகலா பற்றி இழுத்ததை பற்றி கோபமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. அதிகாலையே கொஞ்சம் எடப்பாடி கோபமாகவும், விறுவிறுப்பாகவும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

English summary
Why is Edappadi Palanisamy holding a meeting early in the morning after O Panneerselvam press meet? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் அடைந்துள்ள நிலையில் நேற்று ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X