நடு ராத்திரி.. சரியான போதை.. தேவி வீட்டு கதவை தட்டி டார்ச்சர்.. பத்ரகாளியாய் மாறி.. சேலம் ஷாக்
தொல்லை தந்த நபர் மீது சுடுநீரை ஊற்றிய பெண் கைது செய்யப்பட்டார்
சேலம்: நடுராத்திரி.. ஒருத்தர் போதையிலேயே நடந்து போய் தேவி வீட்டு கதவை தட்டி டார்ச்சர் செய்து உள்ளார்.. அதுக்கப்பறம் தேவி, பத்ரகாளியாய் மாறிய செய்திதான் இது!
சேலம் கொண்டலாம்பட்டி பி. நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன்... கூலித்தொழிலாளி.. 24 வயசாகுது.. இவருக்கும். அதே பகுதியில் சேர்ந்த தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண்ணுக்கும் தகராறு இருந்தது வந்தது. இந்த பெண்ணின் அப்பா பெயர் ராதாகிருஷ்ணன்.

அது மட்டுமில்லாமல் தினமும் தண்ணி அடிச்சிட்டு, ராத்திரி நேரம் ஆயிடுச்சுன்னா, தேவியின் வீட்டு கதவை தட்டுவதுதான் ஜனார்த்தனுக்கு பொழப்பாம்.. இந்நிலையில், நேற்றிரவு 2 மணிக்கு செம போதையில் இருந்த ஜனார்த்தனன், வழக்கம்போலவே ராதாகிருஷ்ணன் வீட்டு கதவை தட்டினார்.. தண்ணி அடிக்க சரக்கு வேணும் என்று கேட்டு தொந்தரவும் செய்துள்ளார்.
ஒருகட்டத்தில், அங்கிருந்த தேவியின் மீது கல்லை தூக்கிப் போட்டுள்ளார்.. "மரியாதையா சரக்கு கொடு" என்று கேட்டுள்ளார்.. இதனால் ஆத்திரம் அடைந்த தேவி சுடு தண்ணியை கொதிக்க கொதிக்க எடுத்து வந்து ஜன்னல் வழியாக ஜனார்த்தனன் மீது வீசி உள்ளார்... அது ஜனார்த்தனின் முகம், நெஞ்சு பகுதி மொத்தமும் பட்டு வெந்துவிட்டது.
சுடுநீர் பட்டதில் வலியால் ஜனார்த்தன் அலறி துடித்தார்.. போட்ட போதையெல்லாம் காணாமல் போய்விட்டது.. அவர் போட்ட கூச்சல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். முகம், மார்பு பகுதி வெந்து போன நிலையில் ஜனார்த்தனன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவலறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.. இறுதியாக, சுடுதண்ணீர் ஊற்றிய தேவியை கைது செய்த கொண்டலாம்பட்டி போலீசார், இனிமேல் இப்படியெல்லாம் செய்ய கூடாது என்று அட்வைஸ் தந்து ஜாமீனில் விடுவித்தனர். இப்போது ஜனார்த்தனம் ஆஸ்பத்திரியில் கட்டு போட்டு கொண்டு படுத்திருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications