"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி!
கணவன் பாலியல் தொல்லை தருவதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்
Recommended Video
சேலம்: "நைட் ஆனா டார்ச்சர் பண்றாரு.. பாலியல் தொல்லை தர்றாரு.. எட்டி எட்டி உதைச்சு கொடுமை பண்றாரு.. குழந்தை இல்லைன்னு என்னை அடிக்கிறாரு.. எனக்கு வாழ பிடிக்கல" என்று கணவன் மீது பெண் ஒருவர் புகார் கூறி கொண்டே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
சேலம் அருகே சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி. 32 வயதாகிறது.. இவரது கணவர் ஜெயராஜ்.. இவர் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர்.. 9 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு கல்யாணம் ஆனது.. ஆனால் குழந்தை இல்லை.
குழந்தையின்மையை காரணம் காட்டியே ஆரோக்கியமேரியை ஜெயராஜும், அவரது குடும்பத்தினரும் கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.

அலுவலகம்
மேலும், வரதட்சணை கேட்டும் சித்ரவதை செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இன்று ஆரோக்கியமேரி மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.. திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.

பாதுகாப்பு
அப்போது அலுவலக வளாகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக ஆரோக்கியமேரியின் கையிலிருந்த மண்ணெண்ணை பாட்டிலை கைப்பற்றி.. அவர் மீது தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்தனர். அப்போது போலீசாரிடம் ஆரோக்கியமேரி சொன்னதாவது:

தையல்
"எனக்கு குழந்தை இல்லை.. குழந்தை இல்லைன்னு சொல்லி அடிக்கிறார்.. தினம் தினம் அடித்து சித்ரவதை செய்றார்.. எட்டி எட்டி உதைக்கிறார்.. இங்க பாருங்க வயித்துல எத்தனை தையல் போட்டிருக்கேன்னு.. இங்க பாருங்க காதுல இருக்கிற காயங்களை.. டெய்லி செக்ஸ் டார்ச்சர் தர்றார்.. எனக்கு அம்மா, அப்பா யாரும் இல்லை.. நான் ஒரு அனாதை.. ஏற்கனவே இதை பத்தி புகார் தந்தும் யாருமே நடவடிக்கை இல்லை" என்று கதறினார்.

பரபரப்பு
இதையடுத்து சேலம் டவுன் போலீசார் ஆரோக்கியமேரியை ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில் மாவட்ட ஊராட்சி அலுவலகத்திலேயே பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications