மலேசிய நஜிப் ரசாக்கின் ஊழலில் கூட்டாளியாக செயல்பட்ட இந்திய தொழிலதிபருக்கு சிங்கப்பூர் அதிரடி தடை!
சிங்கப்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கூட்டாளியாக செயல்பட்ட இந்திய தொழிலதிபரான சுவிஸ் தனியார் வங்கியின்
முன்னாள் மூத்த அதிகாரியும் இந்தியருமான ராஜ் ஶ்ரீராமுக்கு சிங்கப்பூர் அரசு 10 ஆண்டுகால தடை விதித்துள்ளது.
மலேசிய பிரதமராக இருந்த நஜிப் ரசாக், நாட்டின் வளர்ச்சிக்கா 1எம்டிபி திட்டத்தை தொடங்கினார். இந்த 1 எம்டிபி நிறுவனமானது வெளிநாடுகளின் நிறுவனங்களிடம் இருந்து நிதி உதவி பெற்றது.

1 எம்டிபி திட்டத்தின் பெயரிலான பெருமளவு நிதி நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இப்படி ஊழல் செய்த நஜிப் ரசாக், சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் அம்பலமானது. இது மலேசியாவில் பெரும் புயலை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நஜிப் ரசாக்கின் வங்கி கணக்கு முறைகேடுகளை கண்டும் காணாமல் இருந்ததாக சிங்கப்பூரை சேர்ந்த இந்திய தொழிலதிபரான ராஜ் ஶ்ரீராமும் சிக்கினார். சுவிஸ் நாட்டின் தனியார் வங்கியான பி.எஸ்.ஐ.-ன் சிங்கப்பூர் கிளையின் மூத்த அதிகாரியாக இருந்தவர் ராஜ் ஶ்ரீராம்.
நஜிப் ரசாக்கின் கூட்டாளியாக இருந்து ஊழல் முறைகேடுகளில் உடந்தையாக செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக ராஜ் ஶ்ரீராம் மீது விசாரணைகள் நடைபெற்றன. இந்த விசாரணையின் முடிவில் ராஜ் ஶ்ரீராமுக்கு சிங்கப்பூர் அரசு 10 ஆண்டுகாலம் தடை விதித்துள்ளது. நஜிப் ரசாக்கின் வங்கி பரிவர்த்தனை முறைகேடுகள் தொடர்பாக முறையான அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு நிதிசார் நடவடிக்கைகளில் ராஜ் ஶ்ரீராம் ஈடுபடவும் சிங்கப்பூர் அரசு தடை விதித்திருந்தது. இதன் அடுத்த கட்டமாக 10 ஆண்டுகால தடை விதிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications