ராஜேந்திர பாலாஜி முக்கிய தலைவர்.. சீக்கிரமே குற்றமற்றவர் என்று நிரூபிப்பார் பாருங்க! பாஜக அண்ணாமலை
சிவகங்கை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் குற்றமற்றவர் என நிரூபிப்பார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் வேலுநாச்சியாரின் 292 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு தமிழக பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் தமிழக மக்கள் மேல் 7 ஆண்டுகளாக பிரதமருக்கு அன்பு, பாசம், காதல் குறையாமல் இருந்து வருகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு பேசுகிறது.

ராஜீவ் காந்தி
இது திமுகவுக்கு அம்னீசியா உள்ளதையே காட்டுகிறது. ராஜீவ் காந்தி கொலை குற்ற வழக்கில் 7 பேரின் விடுதலை சட்டபூர்வமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் யாரும் உணர்ச்சிவசப்படாதீர்கள். முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பொருத்தவரை எங்களது கூட்டணி தலைவர்களில் முக்கியமானவர்.

அண்ணாமலை
அவர் விரைவில் குற்றமற்றவர் என நிரூபித்து வருவார். அதுவரை காத்திருக்க வேண்டும் என பாஜக அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ 3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை
இது மட்டுமல்லாமல் இன்னும் பிற வழக்குகளும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் அவர் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறது. அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

வங்கிக் கணக்குகள் முடக்கம்
இந்த நிலையில் அவர் ஊர் விட்டு ஊர் செல்லாமல் இருக்க அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. எனினும் அவரது இருப்பிடம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு அதிமுகவில் சில நிர்வாகிகள் உதவி செய்வதாக வந்த தகவலை அடுத்து தனிப்படையினர் அவர்களிடம் ராஜேந்திர பாலாஜி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜேந்திர பாலாஜியை பிடிக்க இத்தனை தனிப்படையா, அவர் என்ன தேச துரோகியா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications