• search
சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நொறுங்கிடுச்சு இதயம்.. "நயவஞ்சகக்காரி".. இப்படி எங்காச்சும் நடக்குமா, ஒதுக்குப்புறத்தில் சாமியார் வீடு

Google Oneindia Tamil News

சிவகங்கை: ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.. இருந்தாலும், இதற்கெல்லாம் நஞ்சாக, பெரும்பாலும் மூடநம்பிக்கைகள் இருந்து வருவதும், சில பெண்களே இதில் சிக்கி வருவதும் அதிர்ச்சியாக உள்ளது.. இந்த காரைக்குடி சம்பவத்தையும் அப்படி சொல்லலாம்.

காரைக்குடி அருகே இளம்புளிவயல் என்ற ஒரு கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் ரேணுகாதேவி.. இவருக்கு 13 வருடங்களுக்கு மன்பு கல்யாணம் ஆகிவிட்டது..

கணவர் ஆர்எஸ் மங்கலம் அருகே உள்ள ஓடைக்கால் கிராமத்தை சேர்ந்தவர்.. 11 வயதில் ஒரு மகனும், 8 வயதில் மகளும் இவர்களுக்கு உள்ளனர்.

 எம்ஜிஆர் சினிமா லவ் காட்சிகள் மீதான திமுக எம்.பி.யின் திடீர் விமர்சனம்..வாத்தியார் ரசிகர்கள் 'நறநற' எம்ஜிஆர் சினிமா லவ் காட்சிகள் மீதான திமுக எம்.பி.யின் திடீர் விமர்சனம்..வாத்தியார் ரசிகர்கள் 'நறநற'

ஜாலி லேடி

ஜாலி லேடி

அந்த கிராமத்தில் எந்த வேலையும் சரியாக கணவருக்கு அமையவில்லை.. வருமானமும் குறைவாக இருந்ததால், குடும்பத்தை நடத்த முடியவில்லை.. அதனால், சென்னைக்கு வேலை தேடி கணவர் சென்றார்.. சென்னையில் ஒரு டாஸ்மாக் பாரில் வேலை செய்து, அதில் கிடைக்கும் வருவாயை மனைவிக்கு அனுப்பி வந்துள்ளார்... ஆனால், இந்த ரேணுகாதேவி, அந்த பணத்தை வீட்டுக்கும், குழந்தைகளுக்கும் செலவு செய்யாமல், ஆடம்பர செலவை செய்து, ஜாலியாக சுற்றி வந்தார்.. இதனால், ரேணுகாதேவியின் ஆடம்பர தேவைக்கு, அந்த பணம் போதவில்லை..

சித்தர் பீடம்

சித்தர் பீடம்

அதேசமயம், ஆடம்பர செலவை குறைக்கவும் விருப்பமில்லை. இதற்கு ஒரே வழி, கோடீஸ்வரியாகிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தார்.. உடனடி கோடீஸ்வரி ஆக வேண்டும் என்றால், அது சாமியார் அருளால்தான் முடியும் என்று நம்பினார்.. திருப்பத்தூர் அருகே வேட்டங்குடிப்பட்டி என்ற கிராமத்தில், சொக்கலிங்கம் சுவாமிகள் சித்தர் பீடம் உள்ளது... இந்த சித்தர் பீடத்தில் ராமகிருஷ்ணன் என்ற சாமியாரிடம் பரிகாரம் பெற்றால், உடனே கோடீஸ்வரி ஆகிவிடலாம் என்று அந்த ஊரில் இருந்த ஒரு பெண் சொல்லி உள்ளார்.. உடனே ரேணுகாதேவியும், சாமியாரை தேடி போனார்.. விஷயத்தை சொன்னார்..

உடலுறவு

உடலுறவு


அந்த சாமியாரும் இதற்கு பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்று சொல்லி, மானகிரியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.. அங்கே ரேணுகாதேவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. இதுதான் பரிகாரமாம்.. இதற்கு ரேணுகாதேவியும் ஒப்புக்காண்டுள்ளார்.. ஆனால், அந்த சாமியார் இன்னொரு பரிகாரம் சொன்னார்.. அதன்படி, 11 வயதுக்கு உட்பட்ட சிறுவனுடன் நீ உறவு கொள்ள வேண்டும், அந்த சிறுவன் உன்னுடன் உறவு கொள்வதை நான் கண்ணால் பார்க்க வேண்டும், நானும் 11 வயதுக்கு உட்பட்ட சிறுமியிடம் உறவு கொள்ள வேண்டும், அதனை நீ பார்க்க வேண்டும், அதேபோல, அதுபோல் அந்த சிறுவர் சிறுமியர் உறவு கொள்வதை நாம் இருவரும் சேர்ந்து பார்க்க வேண்டும் என்று பரிகாரங்களை அவிழ்த்துவிட்டார்.

அக்கப்போர்

அக்கப்போர்

இது அத்தனையையும் உண்மை என்றே நம்பினார் ரேணுகாதேவி.. அதுமட்டுமல்ல, இந்த தகாத உறவுகளில் ஈடுபடுத்த, தான் பெற்ற 11 வயது மகனையும், 8 வயது மகளையும் கடந்த அக்டோபர் 22ம் தேதி, சாமியாரின் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்... அன்றைய தினம் இரவு சாமியார் வீட்டிலேயே 3 பேரும் தங்கி உள்ளனர். அப்போது, சாமியார், ரேணுகா தேவியையும், ரேணுகா தேவியின் 11வயது மகனையும், 8 வயது மகளையும் நிர்வாணப்படுத்தியுள்ளார்... அந்த குழந்தைகளை ஒருவருக்கொருவர் உறவு கொள்ள வைத்துள்ளார்.

டுபாக்கூர் சாமியார்

டுபாக்கூர் சாமியார்

சாமியாருடன் சேர்ந்து செல்வகுமாரி தனது குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார். அத்துடன் தன் பிள்ளைகள் கண்முன்னே சாமியாருடன் செல்வகுமாரி தனிமையில் இருந்துள்ளார்... மறுநாள் காலை ரேணுகாதேவி தன்னுடைய குழந்தைகளுடன் தனது கணவரின் கிராமத்திற்கு வந்து விட்டார்... அப்போது, ரேணுகா தேவியின் மகளிடம், அவரது பாட்டி, நேற்றிரவு எங்கே போனீர்கள் என்று கேட்டபோது, நிர்வாண பூஜையை பற்றி சொல்லி உள்ளார்..

நடுநடுங்கிட்டார்

நடுநடுங்கிட்டார்

அதிர்ந்து போன சிறுமியின் பாட்டி, சென்னையில் டாஸ்மார்க் பாரில் வேலை பார்க்கும் தன்னுடைய மகனுக்கு விஷயத்தை சொல்லி, உடனடியாக ஊருக்கு வரவழைத்துள்ளார். அனைத்தையும் கேட்டு இடிந்து போன ரேணுகா கணவர், தன்னுடைய உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் போலி சாமியார் ராமகிருஷ்ணன் மீதும், ரேணுகாதேவி மீதும் நாச்சியாபுரம் போலீசில் புகார் தந்தார்.. மேலும், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் இதுகுறித்து புகார் அளித்தார்.

வெறிநாய்கள்

வெறிநாய்கள்

அதனைத் தொடர்ந்து போலி சாமியார் ராமகிருஷ்ணன், ரேணுகாதேவியை நேரில் அழைத்து போலீசார் விசாரித்தனர்.. இவர்கள் சொன்னதை கேட்டு போலீசாரே அதிர்ந்துவிட்டனர்.. இறுதியில் அந்த போலி சாமியார் ராமகிருஷ்ணன், ரேணுகாதேவி ஆகிய 2 பேரையுமே போக்சோவில் கைது செய்து, செய்து சிறையில் அடைத்தனர்... இந்த போலி சாமியார் பற்றி அந்த பகுதியில் அவ்வளவாக யாருக்கும் தெரியவில்லை.. சாமியாரின் வீடு, மானகிரியில் இருந்து ஒதுக்குப்புறமான பகுதியில் இருக்கிறது.. இந்த வீட்டிற்கு எளிதில் யாருமே நுழைய முடியாதாம்.. அப்படியே நுழைந்தாலும், 4 வெறிநாய்களை சாமியார் வளர்த்து வருகிறார்... அந்த நாய்களை பார்ப்பதற்கே பயமாக இருக்கிறதாம்.

ஒதுக்குப்புறத்தில்

ஒதுக்குப்புறத்தில்

அதேபோல, அவரது வேட்டங்குடிப்பட்டி சித்தர் பீடமும் ஊருக்கு வெளிப்புறத்திலேயே அமைந்துள்து.. இந்த இந்த இடமும் பார்ப்பதற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.. சாமியாரை விசாரித்தால்தான், இன்னும் பல உண்மைகள் தெரியவரும். எத்தனை பெண்களை, எத்தனை பிஞ்சுகளை, இந்த சாமியார் நாசமாக்கினாரோ தெரியவில்லை.. இதனிடையே, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், அந்த சிறுமியை பாலியல் சீண்டல் எதுவும் செய்துள்ளானா என்பதை கண்டறிய மெடிக்கல் செக்கப்புக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. சிறுவனுக்கும் மெடிக்கல் செக்கப் நடக்கிறது.. நடந்த இந்த சம்பவத்தை எல்லாம் கேட்டு, காரைக்குடி மக்கள் மட்டுமல்ல, தமிழகமே அதிர்ந்து போய் கிடக்கிறது..!!

ஆசைவார்த்தை

ஆசைவார்த்தை

கணவருக்கு சரியான வேலை அமையவில்லை என்பதற்காக, சாமியாரிடம் சொன்னதுமே அவர், அந்த வேலை குறித்து குறி சொன்னாராம்.. அப்போது ரச மணி ஒன்றை ரேணுகா தேவியிடம் கொடுத்து இதை கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் கோடீஸ்வரி ஆகிடலாம் என்றும் ஆசை காட்டி உள்ளார்.. உடனே வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டார் ரேணுகா தேவி.. இதை பார்த்ததும்தான், 8 வயது மகளுக்கு அமாவாசை இரவு சிறப்பு பூஜை செய்தால் செல்வம் பெருகும் என்று விஷயத்துக்கு வந்துள்ளார் சாமியார்.. இப்படித்தான், கோடீஸ்வரியாக வேண்டும் என்று கேரள பெண் பேராசைப்படவும், அதற்கு தமிழகத்தின் பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கிவிட்டது.. அந்த சம்பவமும், இந்த சம்பவமும், எல்லாவற்றிற்கும் காரணமே இந்த டுபாக்கூர் சாமியார்கள்தான் என்பதைதான் ஜீரணிக்கவே முடியவில்லை..!!

English summary
Dangerous Fellow and fake preacher arrested under pocso act including woman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X