காரைக்குடியில் முதலிரவில் நெருக்கமாக இருந்த காதல் தம்பதி.. வீடியோவால் டாக்டர் உள்பட 4 பேர் கைது
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் காதல் திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று இரவு இளம்பெண்ணும், அவருடைய கணவரும் வீட்டில் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மறுநாள் காலையில் அவரது வீட்டுக்கு காரில் வந்த 4 பேர் அந்த இளம்பெண்ணிடம், அவர்களுடைய வீடியோவை காட்டி ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டினார்களாம். இந்த விவகாரத்தில் டாக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். ஆனால் தனிமையில் உள்ள ஜோடிகளை வீடியோ எடுத்து மிரட்டி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் புகார் அளித்தால் கடைசி வரை கம்பி எண்ண வேண்டியது வரும் என்பது புரிவது இல்லை.. அப்படித்தான் ஒரு கும்பல் சிக்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் அண்மையில் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன முதல் நாள் இரவு இளம்பெண்ணும், அவருடைய கணவரும் வீட்டில் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மறுநாள் காலையில் அவரது வீட்டுக்கு காரில் வந்த 4 பேர் அந்த இளம்பெண்ணை அழைத்து பேசியிருக்கிறார்கள்.
அப்போது அந்த பெண்ணிடம், கணவருடன் இருக்கும் ஆபாச வீடியோவை எடுத்து வைத்திருப்பதாகவும், ரூ.3 லட்சம் தராவிட்டால் அதை வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்கள்.. அதற்கு அந்த இளம் பெண் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறியுள்ளார்.
இதனால் அவர்கள், அந்த பெண் அணிந்திருக்கும் தோடு, சங்கிலி உள்ளிட்ட நகைகளை கழற்றி தருமாறு கேட்டனர். அப்போது அவர் அவை கவரிங் நகைகள் என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், நாங்கள் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும், இல்லையென்றால் வீடியோ வெளியே வந்து விடும் என்று கூறி மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண்ணை மிரட்டியது காரைக்குடி பெரியார் நகரை சேர்ந்த சித்தா டாக்டரான அரிகரசுதன்(வயது 28), வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி(24), கோகுல் சந்தோஷ்(21) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications