தமிழன் தான் எந்நாளும்..வியக்க வைக்கும் கீழடி! தாழிக்குள் நெல்லும் பல்லும்! ஆய்வாளர்கள் ஆச்சர்யம்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 8-ம் கட்ட அகழாய்வுப் பணியின்போது, கொந்தகை தளத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில், முதல் முறையாக, தாழியினுள் நெல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில், கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் 8-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி முதல் மொத்தம் 20 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கொந்தகையில் பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தியிருக்க கூடும் என கருதப்பட்டு, அங்கு நடைபெற்ற அகழாய்வில், இதுவரை மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

கொந்தகையில் அகழாய்வு
தற்போது நடைபெற்று வரும் 8-ம் கட்ட அகழாய்வில் 57 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் முழுமையாக சேதமடையாமல் ஒருசில தாழிகள் மட்டுமே உள்ளன. அவற்றில் உள்ள பொருட்களை மட்டும் மரபணு சோதனை செய்ய தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் தாழி திறக்கப்பட்டு, அதில் உள்ள எலும்புகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டது.

123-வது தாழி திறப்பு
இந்நிலையில், தமிழக தொல்லியல்துறை ஆணையாளர் சிவானந்தம், இணை இயக்குநர் ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய்குமார், காவ்யா உள்ளிட்டோர், நேற்றிரவு, 123-வது தாழியை திறந்தனர். நான்கரை அடி உயரமுள்ள தாழியினுள் சிதலமடைந்த மண்டை ஓடும், கை, கால் எலும்புகளும் கிடைத்துள்ளன. இதுவரை தாழிகளினுள் மண்டை ஓடு, சுடுமண் பானைகள், இரும்பு ஆயுதம் உள்ளிட்டவை மட்டும் கண்டறியப்பட்டன.

தாழியினுள் நெல் மணிகள்
தற்போது முதல்முறையாக முதுமக்கள் தாழியினுள் நெல் மணிகள் கண்டறியப்பட்டுள்ளன. இறுகிப் போன நிலையில் கிடைத்துள்ள இந்த நெல்மணிகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இதேபோல், முதல் முறையாக தாழிகளினுள் சுடுமண் பாத்திரங்களும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தாழிகள்
இதுகுறித்து தொல்லியல் துறையினர் தெரிவிக்கையில், இந்த தாழிகள் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கக்கூடும். இந்த தாழிகள், ஒரு அந்தஸ்தாகவே கருதப்பட்டிருக்க வேண்டும். தாழியினுள் உள்ள பொருட்களை வைத்து இறந்தவர்களின் மதிப்பையும் அறிய முடிகிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள தாழியினுள் 6 சுடுமண் பாத்திரங்கள் உள்ளிட்ட 19 பொருட்கள் கிடைத்துள்ளன.

மதிப்பு மிக்கவர்
தாழியினுள் அதிகளவு பாத்திரங்கள் இருப்பதாலும், நெல் மணிகள் இருப்பதாலும் இவர் செல்வந்தவராகவோ அல்லது மதிப்புமிக்கவராகவோ இருந்திருக்கக்கூடும். மேலும், முகத்தின் கீழ்தாடை பற்கள் கிடைத்துள்ளன. மொத்தம் 16 பற்கள் உள்ளன. பற்கள் அனைத்தும் வலுவானதாக இருந்திருக்கும். தாழியினுள் புதைக்கப்பட்டவர்கள் நல்ல திடகாத்திரமான, வலுவான உடலமைப்பை கொண்டவராக இருந்திருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இந்த மாதத்துடன் பணிகள் நிறைவு பெற உள்ளதை அடுத்து, தாழிகள் அனைத்தையும் திறந்து ஆய்வு செய்ய தொல்லியல் துறையினர் திட்டமிட்டு, அதற்கான பணிகளை விரைவுப்படுத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications