காரைக்குடியில்"கவரிங்"நகையுடன் நின்ற ராஜாத்தி..திடீர்னு சிவகங்கை வங்கிக்குள் டக்குனு நுழைந்த ஆபீசர்ஸ்
சிவகங்கை: பிரபல தனியார் வங்கியில் நடந்த சம்பவம் சிவகங்கையில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள் என்றாலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் கல்லலில் செயல்பட்டு வருகிறது ஐசிஐசிஐ தனியார் வங்கி.. இந்த பேங்க்கில் மேனேஜராக வேலை பார்த்து வருபவர் விக்னேஷ்.. 34 வயதாகிறது.. இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கோட்டைகுளத்தைச் சேர்ந்தவர்.

இதே அலுவலகத்தில் துணை மேலாளராக பணியாற்றி வருபவர் ராஜாத்தி.. 38 வயதாகிறது.. இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புலிக்கண்மாயைச் சேர்ந்தவர். இந்நிலையில், இந்த வங்கியின் மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது அடகு நகைகளில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்ததை கண்டு அதிர்ந்தார்.
மோசடி பணம்: இதையடுத்து, உடனடியாக விசாரணையையும் மேற்கொண்டார். அப்போதுதான், வங்கி மேலாளர், துணை மேலாளர் 2 பேரும் சேர்ந்து, மோசடி காரியத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதாவது 37 பேர் வங்கியில் அடகு வைத்த 533 நகைகளை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்திருக்கிறார்கள்.. அத்துடன், அடகு வைத்த அசல் நகைகளை தங்களுக்கு தெரிந்தவர்கள் பெயரில் மறுபடியும் அதே வங்கியில் அடகு வைத்து பணத்தையும் பெற்றிருக்கிறார்கள்.
இதற்கு நடுவில், அடகு வைத்த நகை உரிமையாளர்களில் 26 பேர், தஙகள் நகைகளை மீட்க வங்கிக்கு வந்துள்ளனர்.. உரிய பணத்தை செலுத்தி தங்கள் நகைகளை திருப்பியபோது, அவர்களது அசல் நகைகளை திருப்பி தந்துள்ளார்கள். ஆனால், அவர்களிடம் வாங்கிய பணத்தை வங்கி செலுத்தவில்லை...
கஸ்டமர்கள்: வாடிக்கையாளர்களுக்கும், தங்களது அசல் நகைகள் திரும்ப கிடைத்துவிட்டதால் எந்த சந்தேகம் வரவில்லை. இந்த மோசடியை பயன்படுத்தி, கிட்டத்தட்ட ரூ.2,03,86,973 கோடி பணத்தை ராஜாத்தியும், விக்னேஷும் சம்பாதித்திருப்பதும் மோசடியில் தெரியவந்தது.
இதையடுத்து, மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிம் இதுகுறித்து புகார் செய்தார்... இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விக்னேஷ், ராஜாத்தி இருவரையும் கைது செய்தனர்.. அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்றுள்ளது.. அதேபோல, மோசடி பணத்தை கொடுத்து வைத்திருந்த ரமேஷ் (48), அவரது மகன் சதீஷ் ( 21) ஆகியோரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மொத்த பணம்: இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "மோசடி பணத்தில், விக்னேஷ் ஆன்லைன் ரம்மி விளையாடியிருக்கிறார்.. இதில் மொத்த பணத்தையும் இழந்திருக்கிறார்.. மறுபடியுன் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக, அடகு வைத்த நகைகளில் மேலும் மோசடி செய்துள்ளார். அதேபோல் ராஜாத்தியும், மோசடியாக கிடைத்த பணத்தை பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்திருக்கிறார்.
இந்த வங்கியில் 26 பேர் மட்டுமே பணத்தை செலுத்தி தங்களது அசல் நகைகளை திருப்பியிருக்கும் நிலையில், 11 பேர் தங்களது நகைகளை திருப்பவில்லை.. எனினும், அவர்களது அசல் நகைகள் வங்கியிலேயே பாதுகாப்பாக உள்ளதால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்கின்றனர்.
பரபரப்பு: பிரபலமான ஒரு தனியார் வங்கியில், வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த 2 ரூபாய் கோடி மதிப்பிலான தங்க நகைகளுக்கு பதில், கவரிங் நகையை வைத்து மோசடி பெண் மேனேஜர் உட்பட 4 பேர் கைதாகியிருக்கும் சம்பவம் காரைக்குடியில் அதிர்ச்சியை தந்து வருகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் தந்து வருகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications