குடிபோதையில் மகளுடன் தகராறு..தட்டிக்கேட்ட மாமனாரை சுட்ட மருமகன்..வெலவெலத்த காரைக்குடி

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: குடிபோதையில் மகளிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட மாமனாரை ஏர்கன் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி விட்டு தப்பியோடி விட்டார் மருமகன். காயம்பட்ட மாமனாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் வசித்து வருபவர் நாகப்பன் இவருக்கு இரண்டு மகள்கள் மூத்த மகள் ராக்கம்மாளை ராமச்சந்திரன் என்பவருக்கு திருமணம் முடித்து கொடுத்தார். இருவரம் அதே கோவிலூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமச்சந்திரன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி இராக்கமாளை அடித்து துன்புறுத்துவது வாடிக்கையாக நடைபெற்று வந்துள்ளது.

 குடிபோதையில் தகராறு

குடிபோதையில் தகராறு

ராக்கம்மாள் இரு தினங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் இந்நிலையில் இன்று மாலை ராக்கம்மாள் காரைக்குடியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று தனது கணவர் தினமும் குடித்து விட்டு வந்து தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறிச் சென்றுள்ளார்.

அடிக்கடி சண்டை

அடிக்கடி சண்டை

இது தெரியாமல் ராக்கம்மாளை தேடி அவரது 20 வயது தங்கை அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார் வீட்டில் அக்கா கணவர் ராமச்சந்திரன் மட்டும் இருந்துள்ளார் அவரிடம் சென்று அக்காவை தினமும் அடித்து துன்புறுத்துகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

மாமனாருடன் வாக்குவாதம்

மாமனாருடன் வாக்குவாதம்

மூத்த மகள் வீட்டிற்கு இளைய மகள் சென்றதை அறிந்த நாகப்பன் அங்கு சென்று உள்ளார். அப்போது மாமனாருக்கும் மருமகனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து இளைய மகள் அக்கா கணவரை வீட்டிற்குள் பிடித்து இழுத்து சென்றுள்ளார்.

 துப்பாக்கிச்சூடு

துப்பாக்கிச்சூடு

மனைவியின் தங்கையை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு நாட்டு துப்பாக்கியுடன் வெளியே வந்த ராமச்சந்திரன் தனது மாமனார் நாகப்பனை விலா பகுதியில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினார். இதில் காயமடைந்த நாகப்பன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்றக்குடி காவல் துறையினர் காரைக்குடி டிஎஸ்பி ஆகியோர் நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ராமச்சந்திரனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் கோவிலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+