சினிமா பாணியில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. சிவகங்கை அருகே பெரும் பரபரப்பு!
Recommended Video

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே மாணவன் ஒருவரை பஸ்ஸை தடுத்து நிறுத்தி அரிவாளால் வெட்டியது ஒரு கும்பல். அந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஆண்டிசூரணி விளக்கு பகுதிக்கு பேருந்து வந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் வழிமறித்து, அரிவாளுடன் ஏறினர்.

அவர்கள் பேருந்தில் பயணித்த பயணிகளை மிரட்டி, சூசையப்பர்பட்டிணத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் சிவக்குமார் என்பவரை மட்டும் தனியாக பிரித்து வலது கையில், வெட்டினர். இதனால் பேருந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்தக் கும்பல் தப்பிச் சென்று விட்டது.
சம்பவம் அறிந்து வந்த, காவல்துறையினர், படுகாயமடைந்த மாணவனை மீட்டு காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காளையார்கோவில் காவல்துறையினர், மாணவனை வெட்டிய கும்பல் யார், எதற்காக இந்த தாக்குதல், காதலா அல்லது முன்விரோதமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications