சிவகாசி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாகர்கோவில் புரியுது.. ஆமா.. அது ஏன் சிவகாசி? பாஜக போடும் பக்கா பிளான்.. பரபரப்பு பின்னணி!

பட்டாசு நகரமான சிவகாசியின் முதல் மேயர் என்ற பெருமை யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் சிவகாசியை குறி வைத்து காய் நகர்த்தி வர

Google Oneindia Tamil News

சிவகாசி: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே போட்றா வெடிய என்று கொண்டாட ஆரம்பித்து விட்டனர் அரசியல் கட்சியினர். தை மாத குளிரையும் தாண்டி அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. பட்டாசு நகரமான சிவகாசியை குறி வைத்து பாஜக, காங்கிரஸ் கட்சிகள் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகாசியின் முதல் மேயர் என்ற பெருமை யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 12838 பதவிகளுக்கு தேர்தல்கள் நடைபெற உள்ளன. இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. பிப்ரவரி

 பிப்.1ம் தேதி பள்ளிகள் திறப்பு.. 4 நாள்தான் இருக்கிறது.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு பிப்.1ம் தேதி பள்ளிகள் திறப்பு.. 4 நாள்தான் இருக்கிறது.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றுள்ளது. அந்த கூட்டணியில் இருந்த பாமக வெளியேறி விட்டது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று தெரிகிறது. தேமு.தி.க, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடுவதால் பலமுனைப்போட்டி நிலவுகிறது.

சீட் கிடைக்குமா?

சீட் கிடைக்குமா?

கட்சி நிர்வாகிகள் பலரும் கவுன்சிலர், மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் கனவில் வலம் வருகின்றனர். நமக்கு சீட் கிடைக்குமா என்று கட்சித்தலைமையை சுற்றி வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பாக திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை இன்று தொடங்கி உள்ளது. 3 மேயர் பதவிகளாவது கேட்டு பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. முக்கியமாக சிவகாசி மாநகராட்சியை குறிவைத்துள்ளதாம் காங்கிரஸ் கட்சி.

பட்டாசு நகரத்தின் மீது பாசம்

பட்டாசு நகரத்தின் மீது பாசம்

அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளும் கூட்டணி, பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் குறித்து தனித்தனியே ஆலோசனை நடத்துகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக இந்த மாநகராட்சியின் மேயர் பதவியை குறி வைத்துள்ளது. பட்டாசு,பிரிண்டிங் தொழில் வளம் மிக்க சிவகாசி மாநகராட்சியை பாஜக குறிவைக்க காரணமே எப்படியும் ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கைதானாம்.

ஜெயிக்க வைப்பேன்

ஜெயிக்க வைப்பேன்

காரணம் இதன் பின்னணியில் ராஜேந்திர பாலாஜி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 மாதமாக ஊர் தலைமறைவாக திரிந்து கைது, சிறை என்று அலைந்து ஜாமீனில் வெளி வந்துள்ள ராஜேந்திர பாலாஜி, தன்னை அலைய விட்ட திமுகவை சொந்த ஊரில் வீழ்த்தியே காட்டுவது என்று ஏறத்தாழ சபதம் எடுத்துவிட்டதாகவே கூறப்படுகிறது. சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில்தான் ராஜேந்திர பாலாஜி வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பாஜக இங்கு போட்டியிட்டால் பாஜகவை வெற்றி பெற வைத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம். இதன் மூலம், டெல்லியிலும் தனக்கு செல்வாக்கை அதிகரிக்க முடியும் என்பது ராஜேந்திர பாலாஜி நம்பிக்கையாக உள்ளதாம். இதனால்தான் பாஜக சிவகாசி மாநகராட்சி மேயர் பதவியை குறி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சியில், பாஜக வலுவாக உள்ளது. அக்கட்சியின் காந்திதான் எம்எல்ஏவாக உள்ளார். எனவே அதையும் பாஜக கேட்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி சரவெடி

அதிரடி சரவெடி

பட்டாசு தொழிலில் கோலோச்சி வரும் சிவகாசி மாநகராட்சியை கைப்பற்றுவதில் அனைத்து அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே பெரும் போட்டி நிலவுகிறது. அதே நேரத்தில் பட்டாசு நகரத்தின் முதல் பெண் மேயர் என்ற பெயரை பெற வேண்டும் என்று திமுகவினரும் ஆர்வம் காட்டி வருகின்றனராம். பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் புழங்க கூடிய சிவகாசியை கைப்பற்ற அதிமுகவில் உள்ள நிர்வாகிகளும் பேசி வருகின்றனராம். பட்டாசு என்றாலே சிவகாசிதான். அக்னி நட்சத்திர காலம் போல தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் பட்டாசு நகரத்தில் கூடுதலாக வெடிக்க ஆரம்பித்து விட்டது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். நகர்புற உள்ளாட்சி தேர்தல் களம் அதிரடி சரவெடியாகவே இருக்கப்போகிறது.

English summary
TN Local body election: (தமிழக உள்ளாட்சித் தேர்தல் சிவகாசி மாநகராட்சி) It has been reported that the BJP and the Congress are moving to target the firecracker city of Sivakasi. There is an expectation as to who will get the honor of being the first mayor of Sivakasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X