ஒரு வழியாக ஃபார்முக்கு வந்த கலீல் அஹ்மத்.. பவர் பிளேவிலேயே 11 டாட் பால்.. நிம்மதியடைந்த சிஎஸ்கே!
சென்னை: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹ்மத் பவர் பிளேவில் 3 ஓவர்களை வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 11 டாட் பால்கள் மற்றும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலமாக சிஎஸ்கே அணி ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 38 ரன்களை குவித்தார். இதன்பின் கேகேஆர் அணி 193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது.

சுனில் நரைன் - ஃபின் ஆலன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சிஎஸ்கே அணி சார்பாக கலீல் அஹ்மத் முதல் ஓவரை வீசினார். கலீல் அஹ்மத் முதல் 3 போட்டிகளில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தான் முதல் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இதனால் கலீல் அஹ்மத் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
முதல் ஓவரில் ஒரேயொரு சிக்சரை மட்டுமே கலீல் அஹ்மத் விட்டுக் கொடுத்தார். அதேபோல் 4 டாட் பால்களையும் வீசினார். அன்சுல் கம்போஜ் வீசிய 2வது ஓவரில் ஃபின் ஆலன் 1 ரன்னில் ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணி பக்கம் காற்று வீசியது. இதன்பின் 3வது ஓவரை வீச மீண்டும் கலீல் அஹ்மத் வந்தார். இந்த ஓவரிலும் சுனில் நரைன் ஒரு சிக்சரை விளாசினார்.
இதன்பின் பவர் பிளேவில் மீண்டும் 3வது ஓவரை வீச கலீல் அஹ்மத் அழைக்கப்பட்டார். இதற்கு முன்பாக சுனில் நரைனுக்கு ஓவர் தி ஸ்டம்பில் இருந்து பவுலிங் செய்த கலீல் அஹ்மத், இந்த முறை அரவுண்ட் தி ஸ்டம்பில் இருந்து பவுலிங் செய்தார். நேராக காலுக்கு பந்தை வீச, அது எட்ஜாகி தேர்டு மேன் திசையில் நின்றிருந்த குர்ஜப்னீத் சிங் கைகளில் கேட்ச்சானது.
பவர் பிளேவில் மட்டும் 3 ஓவர்களை வீசிய கலீல் அஹ்மத் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 11 டாட் பால்களை வீசியதோடு, ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இந்த முறை கலீல் அஹ்மத் வீசிய பந்துகள் நன்றாக ஸ்விங்காகியது. இதன் காரணமாகவே சுனில் நரைன் பவுண்டரிகளை அடிக்க முடியாமல் தடுமாறினார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications