புயலை விடுங்க.. மும்பை அணியில் ஏற்பட போகும் சுனாமி.. புகைச்சல் அடங்கி.. நெருப்பு கிளம்புதாமே!
சென்னை: நெருப்பு இல்லாமல் புகையாது என்பார்கள்.. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள புகை அடங்கி அதில் இருந்து நெருப்பு கிளம்பி வர தொடங்கி உள்ளதாம்.
மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்பி வந்ததை ஒன்றல்ல.. இரண்டல்ல.. மொத்தம் 4 வீரர்கள் விரும்பவில்லையாம். ரோஹித்.. பும்ரா.. சூர்ய குமார்.. இஷான் கிஷான் என்று 4 டாப் வீரர்கள் விரும்பவில்லையாம். மும்பை அணியின் பழைய கடப்பாரை பேட்டிங் லைன் அப் திரும்ப வந்துவிட்டது.

அணியில் பொல்லார்ட் தவிர டாப் ஆர்டர் கிட்டத்தட்ட அப்படியே வந்துவிட்டது. பும்ராவும் பார்மிற்கு வந்துவிட்டார். இதனால் கண்டிப்பாக மும்பை அணி உற்சாகத்தில் இருக்கும் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் அணியில் நிலவரம் கலவரமாக இருக்கிறதாம்.
ஹர்திக் பாண்டியா ரிட்டர்ன்: குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இரண்டு சீசன்களை வழி நடத்திய ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். குஜராத் அணியால் இவர் ரீ டெயின் செய்யப்பட்டார். அதன்பின் கொஞ்ச நேரத்தில் மீண்டும் இவர் மும்பை அணிக்கு மாறிவிட்டார் என்று செய்திகள் வந்தன.
இதற்கான கேஷ் டீலிங் ஒப்பந்தம் இரண்டு உரிமையாளர்களுக்கும் இடையில் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது முழுக்க கேஷ் ஏலத் தொகை + கூடுதல் பணம் + விளம்பர வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.முக்கியமாக ரோஹித் சர்மா இனி ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் ஆடுவார் என்று கூறப்படுகிறது.
ரோஹித் சர்மா கேப்டன்சி காலி: ஒரு பக்கம் இந்திய டி 20 கேப்டன்சியை இழக்கும் ரோஹித் சர்மா.. மும்பை அணியின் கேப்டன்சியையும் இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதோ என்று தோன்றுகிறது. இதை ரோஹித் சர்மா அப்போதே விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா அணிக்குள் வர வேண்டாம்.. அவரை எடுக்க வேண்டாம் என்று ரோஹித் சர்மா கூறியதாக நேற்று செய்திகள் வந்தன.
பும்ரா கேப்டன் கோபம்: பும்ரா இந்த முடிவால் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ரோஹித் சர்மாவிற்கு பின் அனுபவம் வாய்ந்த வீரர் பும்ராதான். அவரைத்தான் கேப்டனாக போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏனென்றால் பும்ராவிற்கு சமமான வீரர்கள் கில், சஞ்சு சாமான், கே எல் ராகுல் எல்லாம் கேப்டனாக உள்ளார். ருத்துராஜ் கூட கேப்டன்சி பதவிக்கு போட்டியில் உள்ளார். ஜடேஜாவும் கேப்டன் ஆகும் வாய்ப்பில் உள்ளார். அப்படி இருக்க பும்ராவை கேப்டனாக நியமிப்பார்.. மும்பை அணியின் கேப்டன் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பும்ரா இல்லை என்றால் இஷான் கிஷான், சூர்ய குமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஹர்திக் பாண்டியா அணிக்குள் வந்துள்ளார்.
ஹர்திக் கேப்டன்: ஹர்திக் பாண்டியா ஒரு அணியில் கேப்டனாக இருந்துவிட்டு இன்னொரு அணிக்கு கேப்டன்சி இல்லாமல் வர மாட்டார். கண்டிப்பாக ஹர்திக் பாண்டியா மும்பை கேப்டன் ஆகவே வாய்ப்புகள் உள்ளன . இதனால் மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்கும்.
இதனால்தான் பும்ரா அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. பும்ரா இதை முன்னிட்டே.. அமைதிதான் சிறந்த பதில் என்று ஆங்கிலத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். அவரின் இந்த போஸ்ட் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ரோஹித் மற்றும் சூர்யா, இஷான் கோபம்; ஒரு பக்கம் இந்திய டி 20 கேப்டன்சியை இழக்கும் ரோஹித் சர்மா.. மும்பை அணியின் கேப்டன்சியையும் இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதோ என்று தோன்றுகிறது. இதை ரோஹித் சர்மா அப்போதே விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா அணிக்குள் வர வேண்டாம்.. அவரை எடுக்க வேண்டாம் என்று ரோஹித் சர்மா கூறியதாக நேற்று செய்திகள் வந்தன.
ரோஹித் மட்டுமின்றி இஷான் கிஷான், சூர்ய குமார் யாதவும் கோபத்தில் உள்ளார்களாம். பாண்டியா கேப்டன் ஆனால்.. அடுத்த 5-6 சீசன் அவரே கேப்டன். அபப்டி இருக்க கிஷான், சூர்யா கேப்டன் ஆகவே முடியாது. இதனால் சமமான வீரர்கள் கில், சஞ்சு சாமான், கே எல் ராகுல் எல்லாம் கேப்டனாக உள்ளார். ருத்துராஜ் கூட கேப்டன்சி பதவிக்கு போட்டியில் உள்ளார். தாங்கள் ஆக முடியாத என்ற கோபத்தில் உள்ளனராம் இஷான் கிஷான், சூர்ய குமார் இருவரும்.
நெருப்பு: நெருப்பு இல்லாமல் புகையாது என்பார்கள்.. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள புகை அடங்கி அதில் இருந்து நெருப்பு கிளம்பி வர தொடங்கி உள்ளதாம். இந்த மோதல் கண்டிப்பாக அணியில் இருந்து ஒரு வீரர் வெளியேறுவதில் முடியும் என்கிறார்கள். டிசம்பர் 12க்கு முன் ஒரு வீரர் டிரேட் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அது பும்ராவா அல்லது வேறு வீரரா என்பது போக போக தெரியும்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications