சிஎஸ்கே அணியைவிட மோசம்.. பழைய டெம்ப்ளேட்டில் ஆடும் மும்பை அணி.. தோல்விக்கு காரணமே இதுதான்!
மும்பை: 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடிய அதே டெம்ப்ளேட்டில், இந்த சீசனிலும் மும்பை அணி விளையாடி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல் மும்பை அணியின் லெகசி என்ற பெயரில் 130 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் சில சீனியர்கள் பேட்ஸ்மேன்களும், சம காலத்திற்கு ஏற்ப மாற முடியாத பயிற்சியாளர்களுமே மும்பை அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறார்கள்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய பில் சால்ட் 36 பந்துகளில் 78 ரன்களையும், கேப்டன் ரஜத் பட்டிதார் 20 பந்துகளில் 53 ரன்களையும் விளாசினர்.

இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்துள்ளது. அதிலும் கடைசி நேரத்தில் ரூதர்ஃபோர்ட் 31 பந்துகளில் 71 ரன்களை சேர்த்தார். இல்லையென்றாலும் மும்பை அணியின் ரன் ரேட் மோசமான நிலையில் இருந்திருக்கும். இந்திய டி20 அணியின் பாதி வீரர்களை மும்பை அணி இருந்தாலும், இந்த தோல்வி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகிய மூவருமே 140 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடக் கூடிய பேட்ஸ்மேன்கள் தான். ஹர்திக் பாண்டியா மற்றும் ரூதர்ஃபோர்ட் மட்டுமே 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடக் கூடிய பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர். பிரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா உள்ளிட்டோர் பவர் பிளேவிலேயே பாதி ஆட்டத்தை முடித்துவிடுகிறார்கள்.
பவர் பிளேவில் அவர்கள் செட் செய்யும் டெம்போ, பின்வரும் வீரர்களுக்கு அழுத்தத்தை குறைக்கிறது. ஆனால் மும்பை அணிக்காக ரோகித் சர்மா கடந்த 8 சீசன்களாகவே ஸ்கேம் செய்து வருகிறார். மறுபக்கம் சூர்யகுமார் யாதவ் போட்டிக்கு 30 ரன்கள் என்ற கணக்கில் ஆடிவிட்டு விக்கெட்டை பறிகொடுத்துவிடுகிறார். திலக் வர்மாவிடம் புதிய ஷாட்கள் இல்லை.
அதேபோல் அதிரடி வீரர் ரூதர்ஃபோர்ட்டை 4வது வரிசையில் பேட்டிங் இறக்காமல், 6வது பேட்ஸ்மேனாக களமிறக்குவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. மறுபக்கம் போல்ட், தீபக் சஹர், ஷர்துல் தாகூர் என்று தரமான பவுலர்கள் இருந்தும், அவர்களை சரியாக பயன்படுத்துவது கிடையாது. அதேபோல் மும்பை அணி இன்னும் 2020 சீசனில் கோப்பையை வென்ற டெம்ப்ளேட்டிலேயே அணியை கட்டமைத்திருக்கிறது.
ஆனால் டி20 கிரிக்கெட் வேறு தளத்திற்கு மாறி வரும் சூழலில், மும்பை அணியில் 140 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் வீரர்களே அதிகமாக இருக்கின்றனர். அதேபோல் பழைய மும்பை அணி ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கு எதிராகவும் சரியான திட்டத்துடன் வந்து அதனை களத்தில் செயல்படுத்துவார்கள். ஆனால் இப்போது திட்டம் இருந்தாலும் அதனை செயல்படுத்த தவறிவிடுகிறார்கள் என்பதே ரசிகர்களின் சோகத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications