மேட்சை தூக்கி சாப்பிட்ட ஷமி -கோலி -ஷ்ரேயாஸ்! ஆனா நடுவில் இவரை மறந்துட்டோமே.. அணியின் புது விடிவெள்ளி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் மூத்த வீரர் ஒருவர் ஆடிய விதம் பெரிய அளவில் கவனம் பெற்றது. மற்ற வீரர்களின் ஆட்டம் காரணமாக இந்த ஆட்டம் கவனிக்கப்படாமல் போய்விட்டது.

நேற்று டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா பேட்டிங் எடுத்து தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது. முதல் பவர் பிளேவில் 10 ஓவர்களுக்கு 84 ரன்களை இந்திய அணி எடுத்தது.

How K L Rahul extreme sense in DRS calls helped India indirectly in semi final against New Zealand?

இதை தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயரும் சதம் அடித்தார். வெறும் 70 பந்தில் 8 சிக்ஸ், 4 பவுண்டரி அடித்து 105 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 50 ஓவரில் 397-4 ரன்கள் எடுத்தது. இதையடுத்து நியூசிலாந்து இறங்கி பேட்டிங் செய்தது.

பவுலிங்: அதன்பின் பவுலிங்கில்தான் இந்திய அணி கடுமையாக திணறியது. தொடக்கத்திலேயே ஷமி ஓவரில் நியூசிலாந்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 5.1 மற்றும் 7.4 ஓவரில் ஷமி பந்துகளில் தேவன் கான்வாய், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஆனால் அதன்பின் 73 பந்துகள் பிடித்த வில்லியம்சன் 69 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சதம் அடித்தும் மிட்சல் அவுட் ஆகாமல் பிரஷர் போட்டார்.

மீண்டும் பவுலிங் போட வந்த ஷமி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தார்.

கேன் வில்லியம்சன் 69 ரன்களில் ஷமி ஓவரிலேயே அவுட் ஆனார். அதே ஓவரில் டாம் லாதாம் டக் அவுட் ஆனார். அந்த ஓவர்தான் ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பியது. பின்னர் கிளேன் பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்து பிரஷர் போட்டாலும் பும்ரா ஓவரில் ஜடேஜாவிடம் அவுட் ஆனார்.

இந்தியா வெற்றி: அதன்பின் மார்க் சாப்மன் குல்தீப் ஓவரில் ஜடேஜாவிடம் மீண்டும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஷமி ஓவரில் மீண்டும் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து மிட்சல் 134 ரன்களுக்கு அவுட் ஆனார் பின்னர் கடைசியில் ஷமி வரிசையாக 2 விக்கெட் எடுக்க.. 327-10 ரன்கள் எடுத்து நியூசிலாந்து தோல்வி அடைந்தது. நேற்று ஷமி மட்டும் 7 விக்கெட் எடுத்தார்.

5 விக்கெட்டுகள் எடுத்து அலுப்பான காரணத்தால் 7 விக்கெட் எடுத்து கவனம் ஈர்த்தார். அதேபோல் கில் 80+, ஷ்ரேயாஸ் சதம், கோலி சதம் ஆகியவை இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.

ராகுல் டிராவிட் டிஆர்எஸ்: நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் மூத்த வீரர் ஒருவர் ஆடிய விதம் பெரிய அளவில் கவனம் பெற்றது. மற்ற வீரர்களின் ஆட்டம் காரணமாக இந்த ஆட்டம் கவனிக்கப்படாமல் போய்விட்டது. அந்த வீரர் வேறு யாரும் இல்லை.. கே எல் ராகுல் தான்.

நேற்று பிட்சுக்கு பின் இருந்து அவர் மிக மிக சிறப்பாக கீப்பிங் செய்தார். பவுலர்களுக்கு நன்றாக வழிகாட்டினார் . பல பந்துகள் எட்ஜ் பட்டு பவுண்டரி சென்றாலும் எதுவும் அவர் பிடிக்கும் தூரத்தில் செல்லவில்லை.

நேற்று அதிகம் கவனிக்க வேண்டியது 3 முறை டிஆர்எஸ் முடிவை அவர் எடுக்க வேண்டாம் என்று கூறினார். அவ்வளவு துல்லியமாக இருந்தார். இந்த தொடர் முழுக்கவே டிஆர்எஸ் முடிவுகளில் ராகுல் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். நேற்றும் கூட விக்கெட் விக்கெட் என்று கத்தினாலும் கூட அவர் டிஆர்எஸ் எடுக்க மட்டும் சொல்லவே இல்லை.

அவரின் இந்த செயல் பெரிய அளவில் கவனம் பெற்றது. தோனிக்கு பின் டிஆர்எஸ்ஸில் முதல்முறையாக ஒரு கீப்பர் சிறப்பாக இந்திய அணிக்கு செயல்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+