"குஜராத்தி பாசம்" ஹர்திக்கை மட்டும் கட்டிப்பிடித்து பாராட்டிய ஜெய் ஷா.. மாட்டிக்கொண்ட ஐசிசி தலைவர்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு ஐசிசி தலைவர் ஜெய் ஷா பதக்கத்தை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது நட்சத்திர வீரரான விராட் கோலியுடன் கைகுலுக்கிய போது, ஹர்திக் பாண்டியாவை மட்டும் கட்டிப்பிடித்து பாராட்டு தெரிவித்தார். இதற்கு ஹர்திக் பாண்டியா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதே காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது.

ind vs nz champions trophy final Jay Shah

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜடேஜா வின்னிங் ஷாட்டை விளாசி அசத்தினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் வீரர்கள் உற்சாகமடைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஸ்டம்புகளை வைத்து தாண்டியா ஆடிய காட்சிகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் வீரர்களுக்கு ஐசிசி தலைவர் ஜெய் ஷாவால் பதக்கம் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது ஐசிசி தலைவர் ஜெய் ஷா முதல் பதக்கத்தை வருண் சக்கரவர்த்திக்கு அணிவித்து கைகுலுக்கி பாராட்டினார். தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோரையும் கைகுலுக்கி பதக்கம் அணிவித்து பாராட்டினார்.

ஆனால் ஹர்திக் பாண்டியா வந்த போது மட்டும் அவரை கட்டிப்பிடித்து பாராட்டி பதக்கத்தை அணிவித்தார். ஜெய் ஷாவின் இந்த செயல்பாடுகள் ரசிகர்களிடையே விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. ஜெய் ஷா ஹர்திக் பாண்டியாவை அதிகமாக பாராட்டியதற்கு குஜராத்தி பாசமே காரணம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே ஐபிஎல் தொடரின் போது குஜராத் அணியின் வெற்றி பெறுவதற்கு முன்பாகவே ஜெய் ஷா கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஜெய் ஷாவுக்கு குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வீரரான ஹர்திக் பாண்டியா மீது தனி பாசம் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இருந்தாலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவையும் ஜெய் ஷா கட்டிப்பிடித்து பாராட்டி இருப்பதால், அவரது ஆதரவாளர்கள் ஜெய் ஷாவின் செயலில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+