விலகிய சுப்மன் கில்.. தமிழக வீரருக்கு அடித்த ஜாக்பாட்.. சான்ஸை மிஸ் செய்யாதீங்க சாய் சுதர்சன்!
கவுகாத்தி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் விலகியுள்ள நிலையில், அவரது இடத்தில் தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சாய் சுதர்சன் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை கவுகாத்தி மைதானத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வென்றதால், இந்தப் போட்டியில் கட்டாயமாக வெல்ல வேண்டிய சூழல் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக விலகி இருக்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டியின் போதே கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக சுப்மன் கில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதன்பின் இந்திய அணி வீரர்களுடன் கவுகாத்தி வந்த சுப்மன் கில், இன்று ஃபிட்னஸ் பரிசோதனையில் பங்கேற்றார். அதில் சுப்மன் கில் முழு ஃபிட்னஸ் உடன் இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார்.
மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ள சுப்மன் கில், மருத்துவமனை சிகிச்சையை முடித்து ஃபிட்னஸ் உடன் தயாராக அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால் நாளைய ஆட்டத்தில் இந்திய அணியை சுப்மன் கில் வழிநடத்த உள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் 38வது கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளார். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
அதேபோல் சுப்மன் கில்லின் இடத்தில் யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே நிதிஷ் குமார் ரெட்டி அணிக்குள் கொண்டு வரப்பட்டாலும், சாய் சுதர்சன் விளையாட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
ஆனால் சாய் சுதர்சன் இணைக்கப்பட்டால், ஒரேயொரு 2 வலது கை பேட்ஸ்மேன்கள் மட்டுமே இந்திய அணியில் இருப்பார்கள். கேஎல் ராகுல், துருவ் ஜுரெல் ஆகியோரை தவிர்த்து இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகளவில் இருக்கின்றனர். இதனால் சாய் சுதர்சன் அல்லது நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications