கோப்பை என்னங்க பெருசு.. என் மொத்த ஊதியத்தையும் ராணுவத்திற்கு சமர்ப்பிக்கிறேன் – சூர்யகுமார் அதிரடி
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. ஆனால் வெற்றி கோப்பையை கூட வாங்காமல் இந்தியா புறக்கணித்துவிட்டது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள இந்திய அணி கேப்டன் சூர்யகுமார், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நடைபெற்ற அனைத்து போட்டிகளுக்கான ஊதியத்தையும் இந்திய ராணுவத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மறுபக்கம் பாகிஸ்தான் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதியடைந்தது. ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் இறுதி போட்டியில் மோதிக் கொள்வது இதுதான் முதல்முறை.

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றின் தாக்கம் கிரிக்கெட்டிலும் எதிரொலித்தது. முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் வீரர்களுடன் இந்தியா கைக்குலுக்கவில்லை என்ற சர்ச்சை வெடித்தது. தொடர்ந்து இரண்டாவது போட்டியில் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் ஆரவாரம் செய்தபோது, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் செயல் ஆகியவை சர்ச்சையாகியிருந்தது.
இந்தியா வெற்றி
இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி வெற்றியை இந்திய ராணுவத்திற்கும், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில் ஆசிய கோப்பை இறுதிப் போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அதிரடியாக ஆடியது. ஆனால் இந்திய பெளலர்கள் கம்பேக் கொடுத்து பாகிஸ்தானை 146 ரன்களில் ஆல் அவுட் செய்தது.
எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா தொடக்கத்திலேயே அபிஷேக், சுப்மன், சூர்யகுமார் ஆகிய 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பிறகு திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம், ரிங்கு ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி 9வது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது. நள்ளிரவு நேரத்தில் இந்தியாவில் கூட வெற்றியை கோலாகலமாக கொண்டாடினார்கள்.
புறக்கணிப்பு
ஆனால் துபாய் மைதானத்தில் இந்திய அணி கோப்பை, பதக்கம் உள்ளிட்டவற்றை புறக்கணித்துள்ளது பேசு பொருளாகியுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஹ்சின் நக்வியிடம் (பாகிஸ்தான் அமைச்சர்) கோப்பையை வாங்க மாட்டோம் என்று இந்திய அணி புறக்கணித்துவிட்டதாக தகவல் வெளியானது. மேலும் போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் அணி பிரசன்டேசனுக்கு தாமதமாக வந்ததாலும் இந்தியா புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
இந்திய வீரர்கள் சுப்மன் கில், குல்தீப், ரிங்கு, பௌலிங் பயிற்சியாளர் மோர்னே மார்கல் வெளியே வந்து பேட்டியளித்து கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதாமாக தான் பிரசன்டேசன் நடைபெற்றது. தொகுப்பாளர் சைமன் டளெல் இந்தியா கோப்பையை வாங்க மறுத்துவிட்டது என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூறியுள்ளது என்றார். இந்திய அணி வீரர்கள் கோப்பை வாங்காமல் வெறும் கையுடன் தான் ஹோட்டல் திரும்பினார்கள்.
கோப்பை முடிவு
போட்டிக்கு பிறகு பேட்டியளித்த சூர்யகுமார், "நாங்கள் வெற்றி கோப்பையை வாங்க போவதில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதில்லை. எனக்கு கிரிக்கெட் தான் எல்லாம். நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். மிகவும் கடினமான உழைப்புக்கு பிறகு கிடைத்த கோப்பையை சாம்பியன் அணி வேண்டாம் என்று சொல்லியுள்ளது.
இது சாதாரணமாக நடைபெறவில்லை. எங்களின் கடினமான உழைப்பால் வெற்றி பெற்றுள்ளோம். கடந்த 4 ஆம் தேதியில் இருந்து இங்கு இருக்கிறோம். கடந்த 2 நாட்களில் 2 நல்ல போட்டிகள் அமைந்துள்ளன. இந்த இடத்திற்கு நாங்கள் தகுதியானவர்கள் தான் என நினைக்கிறேன். இதைத்தாண்டி நான் எதையும் கூற விரும்பவில்லை. கோப்பை வேண்டாமா என கேட்கலாம்.
ராணுவத்திற்கு நன்கொடை
எங்கள் டிரஸ்ஸிங் அறையில் தான் கோப்பை உள்ளது. என் அணியில் உள்ள 14 வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் தான் எங்களின் உண்மையான கோப்பை. இந்தப் பயணத்தில் நான் அவர்களின் மிகப்பெரிய ரசிகனாக மாறிவிட்டேன். இங்கு நடைபெற்ற ஒவ்வொரு சம்பவமும் என் நினைவில் எப்போதும் நிலைத்திருக்கும். நாங்கள் வெற்ற பிறகு இங்குள்ள திரையில் ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் இந்தியா என்று காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இதைவிட வேறு என்ன வேண்டும்.
எங்களது செயல்பாடுகளை யாரும் புறக்கணித்துவிட முடியாது. ஆசிய கோப்பையில் நடைபெற்ற அனைத்து போட்டிகளுக்குமான என் சம்பளத்தை இந்திய ராணுவத்திற்கு நன்கொடையாக வழங்குகிறேன். இந்த முடிவையும் சிலர் சர்ச்சையாக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை இதுதான் சரியான செயல்." என்று கூறினார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications