ஒரு வழியாக ரியான் பராக் கனவு நடந்துருச்சு.. ராஜஸ்தான் கேப்டனாக நியமனம்.. பின்னணியில் உறவினர்!
மும்பை: ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இளம் வீரர் ரியான் பராக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் பெரிதாக சாதிக்காத ரியான் பராக், திடீரென ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இதன் பின்னணி தொடர்பாக முழுமையாக பார்க்கலாம்.
2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. கடந்த சீசனில் ராஜஸ்தான் அணி 9வது இடத்தில் நிறைவு செய்தது. அதன்பின் ராஜஸ்தான் அணியில் ஏராளமான சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இணைந்தார்.

மும்பை, டெல்லி உள்ளிட்ட அணிகளில் இருந்து அழைப்பு வந்த போதும், அவர் ராஜஸ்தான் அணியையே தேர்வு செய்தார். ஆனால் ராஜஸ்தான் அணியுடன் இணைந்த ஒரே ஆண்டில் ராகுல் டிராவிட் பதவி விலகினார். அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி டிரேட் மூலமாக வாங்கியது.
அதற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணை சிஎஸ்கே அணி விட்டுக் கொடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கான போட்டியில் ஜடேஜா இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் அணி இளம் வீரரான ரியான் பராக்கை கேப்டனாக நியமனம் செய்திருக்கிறது.
இதற்கு ராஜஸ்தான் அணி உரிமையாளரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரியான் பராக் என்பதே காரணமாக பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ரஞ்சித் பர்தாகூர் இருந்து வருகிறார். ராயஸ் ஸ்போர்ட் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் சேர்மேனாக இருப்பவர் ரஞ்சித் பர்தாகூர்.
கவுகாத்தியை சேர்ந்த தொழில் அதிபரான ரஞ்சித் பர்தாகூர், நேரு குடும்பத்தைச் சேர்ந்த சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் ரியான் பராக்கிற்கு மாமா முறை உறவினர். ரியான் பராக்கை ராஜஸ்தான் அணியை கேப்டனாக முன்னிலைப்படுத்த ராகுல் டிராவிட்டுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாகவே ரியான் பராக்கை 17 வயதிலேயே ராஜஸ்தான் அணிக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால் ரியான் பராக்கிற்கு கிடைக்கும் முக்கியத்துவம் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு அளிப்பதில்லை. கடந்த சீசனில் சஞ்சு சாம்சனை வேண்டுமென்றே சில போட்டிகளில் பெஞ்ச் செய்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications