உலகமே பார்த்து சிரிக்குது.. என்ன பண்ணி வச்சு இருக்கீங்க? இதுதான் உலகக் கோப்பையா? விளாசப்பட்ட ஜெய் ஷா
சென்னை: உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. முதல் போட்டி இன்று நடக்கும் நிலையில் பிசிசிஐ அமைப்பின் செயலாளராக இருக்கும் ஜெய் ஷா தற்போது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்.
உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி உள்ளது. கடந்த உலகக் கோப்பை வரை.. 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது என்றாலே பெரிய அளவில் கொண்டாட்டமான மனநிலை இருக்கும். மக்கள் பலரும் இதற்காக காத்து இருப்பார்கள் . தொடர் தொடங்குகிறது என்றாலே பெரிய எதிர்பார்ப்பு மனநிலை இருக்கும்.
ஆனால் இந்த முறை அப்படி எந்த எதிர்பார்ப்பும், ஆர்வமும் இல்லை. மக்களும் பெரிதாக கொண்டாட்ட மனநிலையில் இல்லை. இதை மேலும் மோசமாக்கும் விதமாக.. இந்த வருடம் தொடக்க விழா எதுவும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடக்க விழா இல்லாததால் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இன்றுதான் தொடங்க போகிறது என்பதே பலருக்கு தெரியாத அளவிற்கு தொடர் தொடங்கி நடந்து வருகிறது. முதல் போட்டி இங்கிலாந்து - நியுசிலாந்து இடையே நடந்து வருகிறது . முதலில் பேட்டிங் இறங்கிய இங்கிலாந்து அணி 255 ரன்கள் எடுத்து 46 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து உள்ளது.
( பல கோடிகளை ஏமாற்றிய எக்ஸ் மனைவி! தவானுக்கு நேர்ந்த கொடுமை.. விவாகரத்து வழக்கில் கோர்ட் என்ன சொன்னது?)
நரேந்திர மோடி மைதானம்: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த ஆட்டம் நடந்து வருகிறது. முதல் போட்டி இன்று நடக்கும் நிலையில் பிசிசிஐ அமைப்பின் செயலாளராக இருக்கும் ஜெய் ஷா தற்போது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார். இதற்கு காரணம் மைதானத்தில் இருக்கும் கூட்டம்தான்.

இன்று நடக்கும் போட்டியில் மைதானத்தில் 1000 பேர் கூட இல்லை. 15 ஆயிரம் பேர் இருக்க வேண்டிய மைதானத்தில் வெறும் 1000 பேர் கூட இல்லை.உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இந்த நிலைமை. அதுவும் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டியில் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால்தான் செயலாளர் ஜெய் ஷா கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார்.
( ஷாக்கடித்த காவிரி.. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு சிக்கல்? )
ஐசிசி உலகக் கோப்பை 50 ஓவர் தொடர் 2023க்கு பொறுப்பான பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா, இந்தியா நடத்தும் மிகப்பெரிய தொடரின் தொடக்க ஆட்டத்தில் தனது சொந்த மாநிலத்தில் 50% மைதானம் கூட நிரம்பியிருப்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அந்த அளவிற்கு மோசமான அளவில் இவர் தொடரை நடத்துகிறார். உலகமே நம்மை பார்த்து சிரிக்கிறது.
உலகக் கோப்பையைத் தொடங்க இந்தியப் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் முதல் போட்டியாக இந்தியா போட்டி இல்லை. திட்டமிடுதலுக்கான மொத்த தவறான நிர்வாகத்தையே சேரும். மிகக் குறைந்த அளவிலான டிக்கெட்டுகள் மட்டுமே உண்மையான ரசிகர்களுக்குக் கிடைத்தன. கடைசி வரை இவர்கள் டிக்கெட்டை விற்கவில்லை.
டிக்கெட் கடைசி நேரத்தில்தான் விற்கப்பட்டது இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அதிலும் கடைசி நேரத்தில்தான் டிக்கெட் புக்கிங் செய்வதற்கான ஆப்ஷன் திறக்கப்பட்டது என்பதும் இந்த சர்ச்சைகளுக்கு மிகப்பெரிய காரணம் ஆகும். இந்த சர்ச்சைகள் காரணமாக, மோசமான ஏற்பாடுகள் காரணமாக நெட்டிசன்கள் ஜெய் ஷாவை விமர்சனம் செய்த் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications