ஃப்ரேம் பாருங்க ஜி.. இது என் 2011 உலகக்கோப்பை ஜெர்சி.. மெஸ்ஸிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த சச்சின்!
மும்பை: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சந்தித்து உரையாடிய வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அப்போது சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 2011 உலகக்கோப்பை ஜெர்சியை கையெழுத்திட்டு மெஸ்ஸிக்கு பரிசாக வழங்கியது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதலில் கொல்கத்தா சென்ற மெஸ்ஸி, அங்கு தன்னுடைய 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து ரசிகர்களை சால்ட் லேக் மைதானத்தில் சந்தித்துவிட்டு சில நிமிடங்களில் வெளியேறினார். இதன்பின் ஐதராபாத் வந்த மெஸ்ஸிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐதராபாத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி அணியுடன் நட்பு ரீதியிலான போட்டியில் மெஸ்ஸி ஆடினார். அதேபோல் மைதானம் முழுக்க வலம் வந்து ரசிகர்களுக்கு கைகளை காட்டினார். இந்த நிலையில் இன்று மும்பையில் மெஸ்ஸி ரசிகர்களை சந்தித்தார். வான்கடே மைதானத்தில் மெஸ்ஸி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் பங்கேற்றனர்.
மேடையில் மெஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட பின், பின் சச்சின் டெண்டுல்கர் மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது வான்கடே மைதானத்தில் இருந்த அத்தனை ரசிகர்களின் கரகோஷமும் விண்ணை தொட்டது. மேடைக்கு வந்த சச்சின் டெண்டுல்கர் மெஸ்ஸியுடன் சில நொடிகள் உரையாடினார். தொடர்ந்து தன்னுடைய 2011 உலகக்கோப்பை ஜெர்சியை கையெழுத்திட்டு மெஸ்ஸிக்கு பரிசாக வழங்கினார்.
அதனை உற்சாகத்துடன் பெற்றுக் கொண்ட மெஸ்ஸி, சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி கூறினார். இதன்பின் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் 10 ஜெர்சியை சச்சின் டெண்டுல்கர் அணிந்து விளையாடினார். அதேபோல் கால்பந்தில் மெஸ்ஸி நம்பர் 10 ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார்.
இதனால் ஜெர்சி 10ஐ சச்சின் பரிசாக அளித்தது.. அதிலும் வான்கடே மைதானத்தில் வைத்து உலகக்கோப்பை ஜெர்சியை வழங்கியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் வான்கடே மைதானத்தில் இருந்த ஏராளமான ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications