தம்பி ஸ்ரேயாஸ்.. எப்படியாச்சும் மும்பை சோலியை முடித்துவிடுங்கள்.. பிரார்த்திக்கும் ஆர்சிபி பாய்ஸ்!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் குவாலிஃபையர் 2வது போட்டியில் மும்பை அணியை எதிர்த்து பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி எப்படியாவது மும்பை அணியை வீழ்த்திவிட வேண்டும் என்று ஆர்சிபி ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய தொடங்கி இருக்கின்றனர்.

ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2வது போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஆர்சிபி அணியிடம் குவாலிஃபையர் முதல் போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தது. இன்னொரு பக்கம் குஜராத் அணியை வீழ்த்திவிட்டு மும்பை அணி குவாலிஃபையர் 2வது போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

ipl 2025 Hardik Pandya Shreyas Iyer RCB

ஸ்ரேயாஸ் - பாண்டிங் கூட்டணி

இந்த சீசனில் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி வந்தாலும், மும்பை அணி பீஸ்ட் மோடில் வெற்றிகளை பெற்று வருகிறது. அதிலும் பும்ரா போன்ற ஒருவர் எப்போதெல்லாம் ஆட்டம் மும்பை அணியில் கைகளில் இருந்து நழுவுகிறதோ, அப்போதெல்லாம் அட்டாக்கில் வந்து இழுத்து தக்க வைத்து கொள்கிறார். இதனால் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் - பயிற்சியாளர் பாண்டிங் இருவரும் சரியான திட்டத்துடன் வர வேண்டும்.

பஞ்சாப் சாதனை

அகமதாபாத் பிட்ச் தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும், பின்னர் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கான பிட்ச்சாக மாறிவிடும். இதனால் தொடக்கத்தில் நிதானமாக விக்கெட்டை கையில் வைத்திருக்கும் அணியே வெற்றியை பெற முடியும். அதேபோல் பஞ்சாப் அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் தோல்வியடைந்ததே கிடையாது.

சாஹல் கம்பேக்

ஒரு தோல்விக்கு பின் உடனடியாக பஞ்சாப் அணி தங்களின் தவறுகளை திருத்தி கொள்ளும். இதனால் இளம் வீரர்களை கொண்ட பஞ்சாப் அணி மும்பை அணியை சர்ப்ரைஸ் செய்ய காத்திருக்கிறது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த பஞ்சாப் அணியின் சாஹல் மற்றும் மும்பை அணியின் தீபக் சஹர் ஆகிய இருவருமே இந்தப் போட்டியில் அணிக்கு திரும்புகின்றனர்.

ஆர்சிபி ஆதரவு

இந்த போட்டியில் எப்படியாவது பஞ்சாப் அணி வெல்ல வேண்டும் என்று ஆர்சிபி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மும்பை அணி ஏற்கனவே 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதனால் ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்வதை காட்டிலும், பஞ்சாப் அணியை எதிர்கொள்வது எளிதானது.

கடைசி வாய்ப்பு

இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணிக்கு ஆர்சிபி ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால், ஐபிஎல் கோப்பையை இதுவரை வெல்லாத இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதனால் புதிய சாம்பியன் அணி உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+