அம்பி டூ அந்நியன்.. 2ம் நாள் ஏலத்தில் அசுரனாக களமிறங்க போகும் மும்பை, பெங்களூர்.. திட்டம் இதுதான்
டெல்லி: முதல் நாளிலேயே பெரும்பாலான அணிகள் தங்கள் பிளேயிங்க 11ஐ கிட்டதட்ட இறுதி செய்துவிட்டன என்றே சொல்லாம். மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மட்டுமே இன்னும் 10க்கும் குறைவான வீரர்களை மட்டுமே எடுத்துள்ளன. நேற்று அமைதியாக இருந்தாலும் இன்று இரு அணிகளுக்கும் மிகப் பெரிய ஜாக்பாட் காத்திருக்கிறது. என்ன அது.. இரு டீம்களின் திட்டம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஐபிஎல் ஏலம் இப்போது நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று ஸ்ரேயஸ், பண்ட் உள்ளிட்ட வீரர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்திற்கு ஏலம் போன நிலையில், எல்லா அணிகளுமே பக்க பிளான் உடனேயே தங்கள் வீரர்களை எடுத்தன.

மும்பை அணி: மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மட்டுமே இன்னும் 10க்கும் குறைவான வீரர்களை மட்டுமே எடுத்துள்ளன. இதில் மும்பை அணியைப் பொறுத்தவரை அவர்கள் 5 வீரர்களைத் தக்கவைத்து இருந்தனர். பும்ரா, சூர்ய குமார் யாதவ், ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா ஆகி. 5 பேரை ஏலத்திற்கு முன்பே தக்கவைத்து இருந்தது. இதனால் ஏலத்திற்கு முன்பே 75 கோடி ரூபாயை மும்பை அணி செலவழித்து இருந்தது.
முதல் நாளான நேற்றைய தினம் ட்ரெண்ட் போல்ட்டிற்கு மட்டுமே முழு வீச்சில் இறங்கினார். சுமார் 12.5 கோடி கொடுத்து போல்ட்டை மும்பை வாங்கியது. அங்கு இப்போது வரை ஒரே வெளிநாட்டு வீரரும் போல்ட் தான். இது தவிர ஏற்கனவே மும்பை அணியில் விளையாடிய நமன் திரை 5.25 கோடிக்கு ஆர்டிஎம் மூலம் வாங்கியது. இது தவிர ராபின் மின்ஸ் என்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை ரூ. 65 லட்சத்திற்கும், ஸ்பீன்னர் கரன் ஷர்மாவை ரூ. 50 லட்சத்திற்கும் மும்பை அணி வாங்கியது. மற்றபடி பெரிய வீரர்கள் யாருக்குமே போகவில்லை.
பெங்களூர் அணி: மறுபுறம் பெங்களூர் அணியைப் பொறுத்தவரை அவர்கள் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகியோரை மட்டுமே தக்கவைத்து இருந்தனர். ஃபாஃப் டு பிளெசிஸ், க்ளென் மேக்ஸ்வெல், சிராஜ் ஆகியோரை கூட தக்கவைக்கவில்லை. இதனால் சுமார் 82 கோடி ரூபாய் உடன் உள்ளே வந்த ஆர்சிபி நேற்று சில முக்கிய வீரர்களை வாங்கியது. ஜோஷ் ஹேசில்வுட், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, பிளிப் சால்ட் ஆகியோரை எடுத்தது. அதிகபட்சமே ரூ.12.5 கோடி தான். அதற்கு மேல் வீரர்களின் விலை போனால் அமைதியாகிவிட்டது.
இதன் காரணமாகவே மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் வெறும் 9 வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்தன. ஆனால், ஏலத்தின் இரண்டாவது நாளான இன்று நிலைமை தலைகீழாக மாறப் போகிறது. மற்ற அணிகள் அமைதியாக இருக்கும் போது, இந்த இரண்டு அணிகளுமே அடித்துத் தூக்கும். ஏனென்றால் தற்போதைய சூழலில் இந்த இரு டீம்களுக்கு மட்டுமே தேவையான பணம் இருக்கிறது.
சூப்பர்: அதிகபட்சமாகப் பெங்களூர் அணியிடம் 30.65 கோடி ரூபாயும், மும்பை அணியிடம் ரூ. 26.10 கோடியும் இருக்கிறது. இந்த இரு அணிகளைத் தவிர வேறு எந்த டீமிடமும் ரூ. 25 கோடிக்கு மேல் தொகை இல்லை. இதற்கு அடுத்து பஞ்சாபிடம் அதிகபட்சமாக ரூ. 22.50 கடி இருக்கிறது. வேறு எந்தவொரு அணியிடமும் ரூ.20 கோடிக்கு மேல் தொகை இல்லை.
ஏலத்தின் இரண்டாவது நாளான இன்று ஃபாஃப் டு பிளெசிஸ், ரோவ்மேன் பவல், க்ருனால் பாண்டியா, நிதிஷ் ராணா, வாஷிங்டன் சுந்தர், டேரில் மிட்செல், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், சாம் கரன், துஷார் தேஷ்பாண்டே எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே வருகிறது. மற்ற அணிகளிடம் தேவையான பணம் இல்லாததால் இந்த நட்சத்திர வீரர்களைப் பெங்களூர் மற்றும் மும்பை ஈஸியாக தட்டித்தூக்க முடியும்.
வேட்டையாடக் காத்திருக்கிறது: மேலும், பல இளம் நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பதில் மும்பை போல வேறு எந்தவொரு டீமும் இருந்ததே இல்லை. இன்று அன்கேப்ட் பிளேயர்கள் பலரும் ஏலத்தில் வரும் நிலையில், அவர்களையும் மும்பை தூக்கப் போகிறது. அதாவது நேற்று முழுக்க அமைதியாக இருந்த மும்பை, பெங்களூர் அணிகள் இன்று இறங்கி அடிக்கப் போகிறது.












Click it and Unblock the Notifications