58 பந்துகளில் சதம்.. பெங்களூரில் இதெல்லாம் ரொம்ப ஓவர் சாய் சுதர்சன்.. பின்னடைவுக்கு காரணமே அதுதான்!
பெங்களூர்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் 58 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்திருப்பது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சின்னச்சாமி மைதானத்திலேயே சதமடிக்க 58 பந்துகளை சாய் சுதர்சன் எடுத்துக் கொண்டது, குஜராத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் சுப்மன் கில் - சாய் சுதர்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் 4 ஓவர்களில் நிதானமாக ஆடிய சாய் சுதர்சன், ஹேசல்வுட் வீசிய 5வது ஓவரில் 14 ரன்களை விளாசினார்.

சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 33 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 57 பந்துகளில் சதத்தை எட்டினார். ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் அடிக்கும் 3வது சதம் இதுவாகும். இதன்பின் அடுத்த பந்திலேயே சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக சாய் சுதர்சன் ஃபார்முக்கு வந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.
ஆனால் ரன் மழை பொழியும் சின்னச்சாமி மைதானத்தில் சாய் சுதர்சன் சதம் அடிக்க 57 பந்துகளை எடுத்துக் கொண்டது குஜராத் அணிக்கே மிகப்பெரிய பின்னடைவாக மாறியது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒரு வீரர் 25 பந்துகளுக்கு மேல் விளையாடிவிட்டால், 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை சேர்க்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
ஒரு சதம் அடிக்க 47 பந்துகளுக்கு மேல் எடுத்துக் கொண்டால், சதமடித்த வீரரின் அணிக்கு அது பின்னடைவாகவே அமைந்திருக்கிறது. அதிலும் சாய் சுதர்சன் தொடக்க வீரர் என்பதோடு, குஜராத் அணியிடம் விக்கெட்டும் கைவசம் இருந்தது. ஆனால் சாய் சுதர்சன் எந்த ரிஸ்கையும் எடுக்கவில்லை. இதனால் சாய் சுதர்சனை ஆர்சிபி அணி விளையாடவிட்டு வேடிக்கை பார்த்ததாகவே பார்க்கப்படுகிறது.
சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவருமே ஒரே ஸ்டைலில் விளையாடக் கூடிய வீரர்களாக இருக்கிறார்கள். இருவராலும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முடியாது. இதனை கன்சிஸ்டன்சி மூலமாக இருவருமே விமர்சனம் வைக்க முடியாமல் ஆடி வந்தனர். ஆனால் இம்முறை கன்சிஸ்டன்சியில் சிக்கல் வந்துள்ளதோடு, குஜராத் அணிக்கும் பின்னடைவாக மாறிவிட்டது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications