சஞ்சு சாம்சன் முகத்தில் உள்ள சிரிப்பு.. நெருங்கி வந்த கவுதம் கம்பீர்.. சென்னையில் சம்பவம் இருக்கு!
மும்பை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய வீரர்களின் பயிற்சியின் போது, நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுடன் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேரம் செலவிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த சில போட்டிகளாக சஞ்சு சாம்சன் மெயின் நெட்ஸில் பயிற்சி செய்வதே பெரிய விஷயமாக இருந்து வந்த சூழலில், நேற்றிரவு அதிக நேரம் மெயின் நெட்ஸில் கம்பீர் மேற்பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி படுதோல்வியை அடைந்திருக்கிறது. இதன் காரணமாக ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு, டாப் ஆர்டரின் சொதப்பலான ஆட்டமே காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் திலக் வர்மா நீக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் இதுவரை இந்திய அணி ஆடிய 5 போட்டிகளில், 4ல் ஏதேனும் ஒரு தொடக்க வீரர் டக் அவுட்டாகி வெளியேறுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். முதல் 3 போட்டிகளில் அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் கடந்த ஆட்டத்தில் இஷான் கிஷன் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் ஆஃப் ஸ்பின்னரை எதிர்கொள்ளும் வகையில் சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனால் இஷான் கிஷன் பழையபடி நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்குவார் என்று தெரிகிறது. இதனிடையே நீண்ட இடைவெளிக்கு பின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுடன் நீண்ட நேரம் செலவிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் மெயின் நெட்ஸில் சஞ்சு சாம்சன் பயிற்சி செய்ய வாய்ப்பு அமையவில்லை. ஆனால் நேற்றைய பயிற்சியின் போது சஞ்சு சாம்சனுடன் கம்பீர் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறார். கம்பீர் மேற்பார்வையின் கீழ் சஞ்சு சாம்சன் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் சேப்பாக்கம் மண்ணில் சஞ்சு சாம்சன் வாண வேடிக்கையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications