ஒரு விபத்து.. குடும்ப பிரச்சனை.. கண்ணீர்! அத்தனை இருந்தும் ஒற்றை ஆளாக இந்தியாவை வெல்ல வைத்த ஷமி
சென்னை; நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவின் பவுலிங் படை கடுமையாக திணறிக்கொண்டு இருக்க.. முகமது ஷமி தனி ஆளாக 7 விக்கெட் எடுத்து மேட்சை மாற்றி உள்ளார். அவர் இல்லையென்றால்.. இனி இந்திய அணி வென்று இருக்கவே முடியாது. ஆனால் இதே ஷமிக்கு பின் கடினமான வரலாறு ஒன்று.. சோகமான கதை ஒன்றும் உள்ளது.
இந்த சீசனில் இந்திய அணியில் முதல் தேர்வாக ஷமி இல்லை. சிராஜ் - பும்ராதான் டாப் பவுலர்கள். ஷரத்துல் கூடுதல் பவுலர். இது போக ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர் பவுலர். மற்றபடி இவர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால்தான் ஷமி உள்ளே வருவார் என்ற சூழ்நிலை இருந்தது.
இப்போது என்று இல்லை 4 வருடத்திற்கு முன் இந்திய அணியின் 2019 உலகக் கோப்பை தொடரிலும் இதே நிலைதான். 2019 உலகக் கோப்பை அணிக்கு முதற்கட்டமாக தேர்வாக இருந்தவர்தான் ஷமி. அவருடன் இன்னும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை அனுப்ப வேண்டும் என்பதே இந்திய அணியின் திட்டமாக இருந்தது. ஆனால் போக போக நிலைமை மாறியது.

காயம் பிரச்சனை; 2016 மத்தியில் அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் அவரை முடக்கி போட்டது. இதனால் அவர் செய்து கொண்ட ஆபரேஷன் காரணமாக அவர் 2 வருடம் வரை சரியாக அணியில் இடம்பெற முடியாமல் கஷ்டப்பட்டார். காயம் அவரை தொடர்ந்து வாட்டியது. 2018 வருடம் இவர் யோ யோ டெஸ்ட்டில் கூட தோல்வி அடைந்தார். ஆம் 2018ம் வருடம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு முன் செய்யப்பட்ட யோ யோ டெஸ்டில் இவர் தோல்வி அடைந்தார். அதனால் அந்த தொடரில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த அளவிற்கு இவரின் பார்ம் மிக மோசமாக பாதாளத்தை தொட்டது.
( மொத்த டீமும் பிரஷரில் இருந்த போது.. ரோஹித் செய்த அந்த ஒரு செயல்! மேட்சில் ட்விஸ்ட் நடந்ததே அங்குதான்)
மனைவியுடன் பிரச்சனை: அப்போது அவருக்கு இரண்டு வாய்ப்புதான் இருந்தது. ஒன்று அப்படியே முடங்கி போய், இர்பான் பதான் போல கமெண்ட்ரி செய்ய கிளம்புவது. இல்லையென்றால் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு, உலகிற்கு நிரூபணம் செய்வது. அவர் தேர்வு செய்தது இரண்டாவது ஆப்ஷனை. ஆம், அவர் வீட்டில் முடங்கவில்லை, மாறாக தன்னை ஜிம்மிற்குள் முடக்கிக் கொண்டார்.

அவருக்கு உடலில் பிரச்சனை இருந்த அதே நேரத்தில் அவரின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் உடனும் பிரச்சனை இருந்தது. ஷமி மீது ஹசின் சூதாட்ட புகார் கூட வைத்து இருந்தார். அது தவறு என்று நிரூபிக்கப்ட்டது. இதனால் அவர் தனது குழந்தையை பிரிய நேர்ந்தது. பிசிசிஐ அப்போதில் இருந்து அவரை கொஞ்சம் தள்ளியே வைத்து இருந்தது. அடிக்கடி அவரை புறக்கணிக்க தொடங்கியது.
புகார் மேல் புகார்; ஷமி தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். அவர் செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.
( 2019ஐ கண்ணில் காட்டி! குலை நடுங்க வைத்த நியுசிலாந்து! மேட்ச் மாறிய அந்த நொடி! இந்தியா வென்றது எப்படி)
முகமது ஷமி தன்னை பலமுறை அவமானப்படுத்தி இருப்பதாக இவர் குற்றச்சாட்டு வைத்தார். வெளிநாட்டில் விளையாட செல்லும் போது வேண்டும் என்றே அவரைவிட்டுவிட்டு செல்வதாக புகார் அளித்துள்ளார். அப்படியே அழைத்து சென்றாலும் சக வீரர்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்துவார் என்றுள்ளார்.

முகமது ஷமி தன்னை அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்துவார் என்றும் கூறியுள்ளார். பலமுறை தன்னை மோசமாக தாக்கி இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். அவரது குடும்பத்தில் இருப்பவர்களும் மோசமாக தாக்கி இருக்கிறார்கள் என்றுள்ளார். மேலும் தன்னை அவரது குடும்ப உறுப்பினர்களும், ஷமியும் சேர்ந்து கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறியுள்ளார். இதனால்தான் தன்னை மோசமாக தாக்கினார்கள் என்று அவர் பேட்டி அளித்து இருக்கிறார்கள். தான் உயிரோடு இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றுள்ளார். ஆனால் இந்த புகார்கள் எல்லாம் பொய்யானது என்று ஷமி கூறினார். இந்த புகார்கள் எதுவும் நிரூபிக்க முடியாத நிலையில் ஷமி மீண்டும் கிரிக்கெட்டிருளு வந்தார். அதோடு அவர் விவாகரத்தும் பெற்றார்.
( பிரச்சனையாகிடும்! வில்லியம்சன் விக்கெட்டை எடுத்தும்.. கொண்டாடாமல் அமைதியாக இருந்த ஷமி.. என்ன காரணம்?)
போட்டி: இந்திய அணியில் ஷமி தன்னை நிரூபிக்கும் முன் பும்ராவும் , புவனேஷ்வர்குமாரும் இந்திய அணியில் பெரிய வீரர்களாக வளர்ந்து இருந்தனர். அதன்பின் சிராஜும் அணிக்குள் வந்தார். இதனால் ஷமி அடுத்த கட்ட சோதனைக்கு தயார் ஆனார். இவர்கள் இருவரை விட தன்னை சிறந்தவர் என்று நிரூபிக்க வேண்டிய சூழநிலைக்கு தள்ளப்பட்டார். ஆனாலும் ஷமி பல பிரச்சனைகளுக்கு இடையில் அதை கடந்து வந்தார்.
அதன்பின்தான் ஷமி தன்னை யோ யோ டெஸ்டில் நிரூபணம் செய்தார். அதோடு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடருக்கு தேர்வானார். வரிசையாக தனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நிரூபணம் செய்து கொண்டு வந்தார். இந்த நிலையில்தான் இந்த வருட உலகக் கோப்பைக்கு தேர்வான ஷமி.. அணிக்குள் எதிர்பாராமல் உள்ளே வந்து தற்போது இந்திய அணியின் வெற்றி முகமாக மாறி உள்ளார்.

எப்படி உள்ளே வந்தார்: இந்த சீசனில் வாய்ப்பு கிடைக்காமல் ஹர்திக் பாண்டியாவின் காயம் காரணமாக ஷமி அணிக்குள் வந்தார். வந்த முதல் மேட்சில் இருந்தே அவர் அதிரடியாக ஆடி வருகிறார்.
இந்த தொடரில் இதுவரை 3 மேட்சில் 5 விக்கெட் ஹவுல் ஐடித்துள்ளார். முதல் 4 மேட்சில் ஆடாமல் இந்த சீசனில் அதிக விக்கெட் எடுத்த வீரராக ஷமி உருவாகி உள்ளார். 23 விக்கெட்டுகளை இந்த சீசனில் ஷமி இதுவரை வீசி உள்ளார்.
உலகக் கோப்பை போட்டியில் ஷமி ஆடிய INNINGS 15. அவர் எடுத்த விக்கெட் 52. குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் ஷமி முதலிடத்தில் இருக்கிறார். ஆனாலும் அணியில் இவர் இடம் இன்னும் உறுதியாகவில்லை. ஷாகீர் கான் 23, ஸ்ரீநாத் 34 போட்டிகளில் செய்ததை இவர் 13 போட்டிகளில் செய்து அசத்தி உள்ளார்.
( சச்சின் காலில் விழு கோலி.. டிரெஸ்ஸிங் ரூமில் உண்மையில் நடந்தது என்ன? வெளியான பரபர பின்னணி )
7 விக்கெட் எடுத்த அசத்தல்; நேற்று தொடக்கத்திலேயே ஷமி ஓவரில் நியூசிலாந்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 5.1 மற்றும் 7.4 ஓவரில் ஷமி பந்துகளில் தேவன் கான்வாய், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஆனால் அதன்பின் 73 பந்துகள் பிடித்த வில்லியம்சன் 69 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சதம் அடித்தும் மிட்சல் அவுட் ஆகாமல் பிரஷர் போட்டார்.
கேன் வில்லியம்சன் 69 ரன்களில் ஷமி ஓவரிலேயே அவுட் ஆனார். அதே ஓவரில் டாம் லாதாம் டக் அவுட் ஆனார். அந்த ஓவர்தான் ஆட்டத்தை இந்தியா பக்கம் திரும்பியது. பின்னர் கிளேன் பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்து பிரஷர் போட்டாலும் பும்ரா ஓவரில் ஜடேஜாவிடம் அவுட் ஆனார். அதன்பின் மார்க் சாப்மன் குல்தீப் ஓவரில் ஜடேஜாவிடம் மீண்டும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஷமி ஓவரில் மீண்டும் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து மிட்சல் 134 ரன்களுக்கு அவுட் ஆனார் பின்னர் கடைசியில் ஷமி வரிசையாக 2 விக்கெட் எடுக்க.. 327-10 ரன்கள் எடுத்து நியூசிலாந்து தோல்வி அடைந்தது. நேற்று ஷமி தனி ஆளாக 7 விக்கெட் எடுத்ததுதான் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக மாறியது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications