வைபவ் சூர்யவன்ஷிக்கு கொடுத்த மரியாதை.. சீனியராக உயர்ந்துவிட்ட விராட் கோலி.. என்ன நடந்தது?
கவுகாத்தி: ராஜஸ்தான் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த கேட்சை பிடித்த விராட் கோலி, எந்தவித கொண்டாட்டமும் இல்லாமல் நடந்து சென்ற வீடியோ ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது. இதன் மூலமாக ஜூனியருக்கான மரியாதையை விராட் கோலி கொடுத்துள்ளதாகவும், சிறுவனுக்கு எதிராக எந்தவித ஆக்ரோஷ கொண்டாட்டமும் செய்ய கூடாது என்ற தெளிவுடன் விராட் கோலி இருந்ததாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. ஆர்சிபி அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்கை வெறும் 18 ஓவர்களில் சேஸிங் செய்து ராஜஸ்தான் அணி தரமான சம்பவம் செய்துள்ளது. ராஜஸ்தான் அணியின் இந்த வெற்றிக்கு வைபவ் சூர்யவன்ஷி காரணமாக அமைந்துள்ளார்.

26 பந்துகளில் 7 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 78 ரன்களை விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, ஆர்சிபி அணியிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டார் என்றே சொல்லலாம். 8 ஓவர்கள் வரை களத்தில் இருந்த வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை 129 ரன்களுக்கு உயர்த்திவிட்டு சென்றார். சிறப்பாக ஆடிய அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது க்ருணால் பாண்டியா பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்து விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த கேட்சை பிடித்த விராட் கோலி, கொஞ்சம் ஆக்ரோஷமாக எழுந்தாலும் உடனடியாக நிதானமாகினார். ஏனென்றால் 15 வயது சிறுவனுக்கு எதிராக எந்தவித ஆக்ரோஷ கொண்டாட்டத்தையும் செய்யக் கூடாது என்ற தெளிவுடன் விராட் கோலி இருந்தார்.
இதனால் கேட்ச் பிடித்த பின் நிதானமாக நடந்து சென்றார். அதேபோல் ஜூனியருக்கான மரியாதையையும் விராட் கோலி அளித்ததாக பார்க்கப்படுகிறது. வழக்கமாக விராட் கோலி எந்த கேட்ச் பிடித்தாலும், எங்கு நின்றிருந்தாலும் பிட்ச்சை நோக்கி ஓடி வருவார். அது வைபவ் சூர்யவன்ஷியின் கேட்சை பிடித்த போது மிஸ்ஸிங்.
இதனால் சிறுவனின் ஆட்டத்தை பாராட்டும் வகையில் விராட் கோலியின் செயல்பாடுகள் இருந்ததாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ஐபிஎல் தொடரின் ஜாம்பவான் அணிகளான சிஎஸ்கே, மும்பை மற்றும் ஆர்சிபி ஆகிய 3 அணிகளின் ரசிகர்களையும் ஒரே நேரத்தில் வைபவ் சூர்யவன்ஷி டார்ச்சர் செய்வதாகவும் ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications