2 முக்கிய அணிகள் அவுட்? செமி பைனலுக்கு இந்த 4 அணிகள்தான் செல்லும்? உலகக் கோப்பையில் செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் புள்ளிகள் பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்தியா புள்ளிகள் பட்டியலில் மேலே சென்றுள்ளது.

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. பல சுவாரசிய திருப்பங்களுடன். எதிர்பாராத வெற்றிகளுடன் இந்த தொடர் சென்று கொண்டு இருக்கிறது. இந்தியா அடுத்தடுத்து போட்டிகளில் வென்று வருகிறது. நேற்று பாகிஸ்தான் இந்தியா இடையிலான உலகக் கோப்பை 2023 லீக் ஆட்டம் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

What are the 4 nations has high chances of going to the semi final of the World Cup 2023?

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் உலகக் கோப்பை 2023 லீக் ஆட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா 199க்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. அந்த போட்டியில் ஜடேஜாதான் ஆட்டத்தை மாற்றினார். இன்று ஜடேஜா மட்டும் 3 விக்கெட், குல்தீப், பும்ரா 2 விக்கெட் , சிராஜ், அஸ்வின் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதன் பின் இறங்கிய இந்திய அணி கோலியின் 85 மற்றும் கே எல் ராகுலின் 97 ரன்கள் காரணமாக இந்தியா வென்றது.

அடுத்தடுத்து வெற்றி: இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வென்றது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்கத்தில் வரிசையாக விக்கெட் விழுந்தது. ஆனால் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர்.

இரண்டு பேருமே மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடி ஆப்கானிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 80 ரன்கள், அஸ்மத்துல்லா உமர்சாய் 62 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் இரண்டு பேரும் அவுட்டான பின் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் 272-8 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸ் முடிந்தது. இதையடுத்து இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 131, இஷான் 47, கோலி 55 ரன்கள் எடுக்க இந்திய அணி வெற்றிபெற்றது.

What are the 4 nations has high chances of going to the semi final of the World Cup 2023?

பாகிஸ்தான் வெற்றி: இதையடுத்து நேற்று பாகிஸ்தானுக்கு எதிராகவும் இந்தியா வென்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்தியா புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வந்துள்ளது. நியூசிலாந்து அணியும் 3க்கு 3 என்ற வெற்றியுடன் உள்ளது. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் 3ல் இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது., தென்னாப்பிரிக்கவும் 3ல் இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இங்கிலாந்தில் 2ல் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.

இப்போது இருக்கும் புள்ளி பட்டியலின்படி இந்த 5 அணியில் ஒரு அணி மட்டுமே புள்ளி பட்டியலில் முதல் 4 இடத்திற்கு வந்து செமி பைனல் செல்லும். ஆஸ்திரேலியா, இலங்கை ஆகியவை செமி பைனல் வாய்ப்பை இழக்கும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+