பந்தை தலையில் வைத்து.. அது என்ன வித்தியாசமா? மேட்ச் முடிந்ததும் ஷமி அப்படி செய்தது ஏன்? ஷாக் காரணம்!
சென்னை: நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த செமி பைனல் ஆட்டத்திற்கு பின் முகமது ஷமி செய்த செயல் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக அவர் அப்படி செய்வது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
நியுசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா நேற்று வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததே முகமது ஷமிதான். மற்ற வீரர்கள் விக்கெட் எடுக்க திணறிக்கொண்டு இருந்த போது முதல் 2 விக்கெட்டுகளை எடுத்தது ஷமி. அதன்பின் விக்கெட் இல்லாமல் 200 ரன்கள் தாண்டிய பின்.. மீண்டும் 3, 4வது விக்கெட்டை எடுத்து ஆட்டத்தை மாற்றியது ஷமி .

அடிப்படை முக்கியம் குமாரே: இதெல்லாம் போக கடைசியில் மீண்டும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தது ஷமி. இந்திய அணி பவுலர்கள் எல்லாம் விக்கெட் எடுக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்த நிலையில்.. புதுசு புதுசாக பவுலிங்கில் வித்தைகளை செய்ய முயலாமல்.. ஸ்டிக் டூ தி பேஸிக்ஸ் என்று சொல்வது போல.. அடிப்படியான பாஸ்ட் பவுலிங் பந்துகளை வீசி.. ஷமி விக்கெட்டுகளை எடுத்தார்.
ஆப் கட்டர், ஸ்லோ பால் எல்லாம் வீசாமல்.. சரியாக டெக்கில் வீசி அவர் விக்கெட்டுகளை எடுத்தார். நேற்று பி[போட்டிக்கு பின்பும்.. நான் பெரிதாக எதையும் செய்யவில்லை. அடிப்படை விஷயங்களை சரியாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதை செய்தேன். விக்கெட்டுகள் விழுந்தது என்று ஷமி கூறியுள்ளார்.
விக்கெட்டுகளை எடுத்தார்: நேற்று தொடக்கத்திலேயே ஷமி ஓவரில் நியூசிலாந்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 5.1 மற்றும் 7.4 ஓவரில் ஷமி பந்துகளில் தேவன் கான்வாய், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஆனால் அதன்பின் 73 பந்துகள் பிடித்த வில்லியம்சன் 69 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சதம் அடித்தும் மிட்சல் அவுட் ஆகாமல் பிரஷர் போட்டார்.
கேன் வில்லியம்சன் 69 ரன்களில் ஷமி ஓவரிலேயே அவுட் ஆனார். அதே ஓவரில் டாம் லாதாம் டக் அவுட் ஆனார். அந்த ஓவர்தான் ஆட்டத்தை இந்தியா பக்கம் திரும்பியது. பின்னர் கிளேன் பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்து பிரஷர் போட்டாலும் பும்ரா ஓவரில் ஜடேஜாவிடம் அவுட் ஆனார்.
அதன்பின் மார்க் சாப்மன் குல்தீப் ஓவரில் ஜடேஜாவிடம் மீண்டும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஷமி ஓவரில் மீண்டும் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து மிட்சல் 134 ரன்களுக்கு அவுட் ஆனார் பின்னர் கடைசியில் ஷமி வரிசையாக 2 விக்கெட் எடுக்க.. 327-10 ரன்கள் எடுத்து நியூசிலாந்து தோல்வி அடைந்தது. நேற்று ஷமி தனி ஆளாக 7 விக்கெட் எடுத்ததுதான் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக மாறியது.
வித்தியாம்சான் கொண்டாட்டம்; நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த செமி பைனல் ஆட்டத்திற்கு பின் முகமது ஷமி செய்த செயல் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக அவர் அப்படி செய்வது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
மேட்சுக்கு பின் ஷமி பந்தை எடுத்து தனது முடி இல்லாத தலையில் வைத்தார். வைத்தபடியே அவர் நடந்து வந்தார். முன்னதாக அவர் 5 விக்கெட்டுகளை எடுத்த கடைசி ஆட்டத்திலும் இதேபோல் செய்தார். தலையில் பந்துகளை வைத்து தேய்த்து கொண்டாடினார். அவரின் இந்த புதிய கொண்டாட்டத்திற்கு காரணம் பராஸ் மாம்ப்ரே என்பவர்தான்.
இந்திய அணியின் பவுலிங் கோச். இவருக்கு தலையில் முடி கிடையாது. இவர்தான் ஷமியின் இப்போதைய பார்மிற்கு காரணம். இந்தியாவின் பாஸ்ட் பவுலிங் புதிய உச்சம் அடையவும் இவரே காரணம். ஷமி அடுத்தடுத்து விக்கெட் எடுக்க இவர் கொடுத்த வித்தைகள்தான் முக்கிய காரணம். இதற்கு நன்றி சொல்லும் விதமாகவே தலையில் பந்தை வைத்து ஷமி சிக்னல் கொடுக்கிறார்.












Click it and Unblock the Notifications