உறவுகளுக்கு அஞ்சலி.. விஜய் கரூர் பிரசாரத்தில் 40 பேர் பலியான சோகம்.. இலங்கை தமிழ் அரசுக்கட்சி வேதனை
கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்தவரும், நாடாளுமன்றம் குழு தலைவருமான சிவஞானம் சிறீதரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களின் உரிமை மீட்புக்காக தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்பணித்தும் - தீக்குளித்தும் உயிர்க்கொடையளித்த தமிழக உறவுகளின் அளப்பெரும் தியாகங்களை நெஞ்சேந்தியவர்களாக, இந்தப் பெருவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எமது பிரார்த்தனைகள் என்று தெரிவித்துள்ளார்.

கரூரில் நேற்று இரவு நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள் 17 பேர், குழந்தைகள் 10 பேர் என மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்தவரும், பாராளுமன்ற எம்.பியும், பாராளுமன்ற குழு தலைவருமான சிவஞானம் சிறீதரன் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது:-
தமிழகத்தின் கரூர் மாவட்டம் - வேலுச்சாமிபுரத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பேரணியில், கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த மனவேதனைக்குரியது.
எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த அசம்பாவிதத்தால் தாய்த்தமிழகத்தைச் சேர்ந்த எமது தொப்புள்கொடி உறவுகளான அப்பாவிப் பொதுமக்கள் 39 பேர் அநியாயமாக உயிரிழந்தமை எமக்கும், எமது மக்களுக்கும் மிகுந்த மனத்துயரை ஏற்படுத்தியிருக்கிறது. நெருக்கடியும், வேதனையும் மிக்க இந்த துயர்மிகுந்த சூழலால் பாதிப்புற்றிருக்கும் எல்லாத்தரப்பினருடனும் உணர்வுரீதியாக நாமும் கரம்கோர்த்துக்கொள்கிறோம்.
மிகக்குறிப்பாக, புதுமுக அரசியல் கட்சியாக தனது புரட்சிகர அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினரும், நண்பர் விஜய் அவர்களினது அரசியல் பயணம், துயரமும் - வேதனையும் மிக்க இந்த உயிர்த்தியாகங்களின் மீது, உறுதி மிக்கதும் மக்கள் மயப்பட்டதுமாக வலுவாக கட்டமைக்கப்படட்டும்.
இழப்பின் வலிகளையும் - ரணங்களையும் உணர்ந்தவர்களாக, ஈழத்தமிழர்களின் உரிமை மீட்புக்காக தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்பணித்தும் - தீக்குளித்தும் உயிர்க்கொடையளித்த தமிழக உறவுகளின் அளப்பெரும் தியாகங்களை நெஞ்சேந்தியவர்களாக, இந்தப் பெருவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் அஞ்சலிகளும், அவர்களது குடும்பத்தினரின் மன ஆறுதலுக்காக எமது பிரார்த்தனைகளும்" என்று கூறியுள்ளார்.
-
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது! அன்று கடம்பூர் ராஜூவுக்காக விஜய் காத்திருந்தார்! இன்று அப்படியே உல்டா! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்!












Click it and Unblock the Notifications