தமிழக எதிர்ப்பை மீறி இலங்கையுடன் ரகசிய ராணுவ உறவை தொடரும் இந்தியா!
கொழும்பு: தமிழகத்தின் கடும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் இலங்கையுடன் ராணுவ உறவுகளை ரகசியமாக தொடருவதில் இந்தியா முனைப்பு காட்டி வருகிறது.
ஈழத் தமிழர் படுகொலை, தமிழக மீனவர் படுகொலை ஆகியவற்றால் இலங்கையுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தாக வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலைப்பாடு. ஆனால் இந்த கடும் எதிர்ப்பு என்பது இந்திய-இலங்கை உறவில் பெரிய அளவில் நெருடலை ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனம்.
தமிழகத்தின் கடுமையான அழுத்தங்களைத் தொடர்ந்தே பிரதமர் இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தார். ஆனால் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கொழும்பு மாநாட்டுக்குப் போய்விட்டு வந்திருக்கிறார்.
இருநாடுகளிடையேயான அரசியல் ரீதியான உறவுகள் ஊசலாட்டமாக இருந்தாலும் ராணுவ ரீதியான உறவு மிகவும் நெருக்கமானதாகவும் ரகசியமானதாகவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதைத்தான் அண்மையில் இலங்கைக்கு சென்று வந்த இந்திய கடற்படை தளபதி ஏ.கே.ஜோஷியின் பயணமும் உறுதி செய்திருக்கிறது.
இலங்கைக்கு ஐந்துநாள் பயணமாக ஏ.கே.ஜோஷி சென்றிருந்தார். அப்போது இலங்கையின் உயர்நிலை அரசியல் மற்றும் ராணுவ தலைவர்களை சந்தித்துப் பேசினார் ஜோஷி. அத்துடன் இந்தியப் பெருங்கடல் தொடர்பான மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களையும் இலங்கை கடற்படை அதிகாரிகளிடம் ஜோஷி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
குறிப்பாக இந்திய பெங்கடல் பகுதியில் நடமாடும் தனியார் பாதுகாப்பு கப்பல்கள் தொடர்பான கவலையை இலங்கையுடன் ஜோஷி பகிர்ந்து கொண்டிருந்திருக்கிறார். அத்துடன் இலங்கையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அத்தனை கடற்படை முகாம்களையும் நேரில் பார்வையிட்டு அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகளையும் வாரி வழங்கியிருக்கிறார் ஜோஷி.
இதன் உச்சமாக கேரள மாநிலத்தில் கடற்படையினருக்காக நடத்தப்படும் பி.டெக் படிப்பில் சேர விரும்பும் வெளிநாட்டவரில் இலங்கை கடற்படையினருக்கே முன்னுரிமை கொடுக்க விரும்புவதாகவும் கூட உறுதி மொழி கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் ஜோஷி.
தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி இலங்கையுடன் ரகசிய ராணுவ உறவை மேற்கொள்வதில் டெல்லி லாபி வெற்றிகரமாக்கிக் கொண்டிருக்கிறது என்பதையே ஜோஷியின் இலங்கை பயணம் எடுத்துக்காட்டுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications