ராஜபக்சேவுக்கு ஆதரவாக இலங்கையில் நடிகர் சல்மான்கான் தேர்தல் பிரச்சாரம்
கொழும்பு: இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஜனவரி 8ம்தேதி நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்சே மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்க்க வியூகம் வகுத்த எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக மைத்திரி பால சிறிசேனா என்பவரை களமிறக்கியுள்ளன.
எப்படியும் இந்த தேர்தலில் வெற்றி பெற்று தனது அரசியல் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் ராஜபக்சே வாக்கு சேகரித்துவருகிறார். தமிழர் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடக்கு மாகாண பகுதிகளில் ராஜபக்சே சிறப்பு கவனம் கொடுத்து தேர்தல் பிரச்சாரம் நடத்திவருகிறார்.
Bollywood push for President Rajapaksa, Salman Khan in Borella today with @PresRajapaksa #PresPollSL @yogital pic.twitter.com/5pGLAa2NgT
— Azzam Ameen (@AzzamAmeen) December 29, 2014 யூடியூப், டிவிட்டர், பேஸ்புக் என சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ராஜபக்சே தீவிர பிரச்சாரம் நடத்துகிறார். சமூக வலைத்தள பிரச்சாரத்திற்கு வட இந்தியாவை சேர்ந்த ஒருவர் உதவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான்கான் இன்று கொழும்பு சென்றடைந்தார்.
பொரளை பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் சல்மான்கானும் பங்கேற்றார். அதேபோல, பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும், ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ராஜபக்சே மகன் நமலுக்கும், சல்மான் கானுக்கும் நடுவே நட்பு இருந்து வருகிறது. ஜாக்குலின் இலங்கையில் பிறந்த வளர்ந்து பாலிவுட் நடிகையானவர். எனவே அந்த அடிப்படையில் இவ்விருவரும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications