For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிளிநொச்சியில் காலமானார் முதுபெரும் ஈழப் போராளி 'காந்தியம்' டேவிட் ஐயா!

By Mathi
Google Oneindia Tamil News

கிளிநொச்சி: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்த மூத்த போராளியும் ஈழத்து காந்தியவாதியுமான டேவிட் ஐயா கிளிநொச்சியில் (வயது 91) நேற்று காலமானார்.

யாழ்ப்பாணத்தில் ஊர்க்காவற்றுறை, கரம்பொன் என்ற இடத்தில் 1924ஆம் ஆண்டு பிறந்தவர் டேவிட் ஐயா. 1953ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக் கழகத்தில் பி.ஆர்க் பட்டப்படிப்படை முடித்தார்.

Veteran Eezham freedom fighter Gandhiyam David Ayya passes away

அதனைத் தொடர்ந்து மிகச் சிறந்த ஆர்க்கிடெக்டாக லண்டன், கென்யா உள்ளிட்ட பல நாடுகளில் நகரங்களின் கட்டுமானப் பணிகளில் பங்கேற்றவர். கென்யாவின் மொம்பாசா நகரம் கட்டமைக்கப்பட்ட போது அதன் தலைமை ஆர்க்கிடெக்காக இருந்தவர் டேவிட் ஐயா.

1979ஆம் ஆண்டு இலங்கை திரும்பிய டேவிட் ஐயா, காந்தீயம் என்ற அமைப்பை உருவாக்கினார். இலங்கையின் மலையகத்தில் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களை ஈழத் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் குடியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பின்னர் தமிழீழ விடுதலைக்காக ஆயுதமேந்திய உமா மகேஸ்வரன் தலைமையிலான ப்ளாட் அமைப்புடன் டேவிட் ஐயா இணைந்து பணியாற்றினார். 1983ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

அப்போதுதான் உலகை உலுக்கிய வெலிக்கடை சிறை படுகொலைகள் நடந்தேறின. வெலிக்கடையில் தமிழ் அரசியல் கைதிகளாக இருந்த குட்டிமணி, ஜெகன் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் டேவிட் ஐயா உயிர் தப்பினார். பின்னர் மட்டக்களப்பு சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

ஈழத் தமிழர் வரலாற்றில் புகழ்பெற்ற மட்டக்களப்பு சிறை உடைப்பு சம்பவத்தின் போது டேவிட் ஐயாவும் சிறையில் இருந்து தப்பி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து ராமேஸ்வரத்துக்கு அதிகயாக வந்தார். மிகப் பெரிய கல்வியாளராக இருந்த போதும் ஒரு அகதி வாழ்க்கையை தமிழகத்தில் வாழ்ந்தார்.

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் வே. ஆனைமுத்து அவர்களின் Periyar Era என்ற ஆங்கில ஏட்டில் ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பாக பல்வேறு ஆங்கில கட்டுரைகளை எழுதினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இலங்கைக்கு அவர் திரும்பியிருந்தார். அங்கு கிளிநொச்சியில் உடல்நலக் குறைவால் நேற்று அவர் காலமானார். அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

English summary
Ezham Freedom Fighter Gandhiyam David Ayya passed away on Sunday at the age of 91 at Kilinochi, Srilanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X