சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலியாவின் மேல் படிப்பு படிப்பது எப்படி? எங்கெல்லாம் செல்லலாம்? எப்படி செல்வது? முழுவிபரம்

Google Oneindia Tamil News

சிட்னி: வெளிநாட்டில் முதல் வாரத்தை சமாளிப்பது எப்படி? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் கங்காரு தேசமான ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்வோர் பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் பயணம் செய்வதற்கான முழு விபரங்கள் வெளியாகி உள்ளன.

பயணம்.. ஒவ்வொரு முறை மேற்கொள்ளும்போதும் அது புதிய மனிதர்களை சந்திக்க வைத்து புது அனுபவத்தை கொடுக்க தவறுவதே இல்லை. தற்போதைய நவநாகரீக உலகில் நாம் அனைவரும் பரபரப்பான மனநிலையுடன் வாழ்ந்து வருகிறோம். இதனால் மனஅழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு ஆளாக நேரிடும்.

இதனை தவிர்க்க பயணப்படுதல் அவசியம். தனியாகவோ, நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினரோடு உள்ளூர், உள்நாடு அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் செய்தால் அது மனதுக்கு ஓரளவு அமைதியை கொடுக்கும். அந்த வகையில் இந்தியாவில் இருந்து ஏராளமானவர்கள் கங்காரு தேசமான ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்கின்றனர். கல்வி, சுற்றுலா உள்பட பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் ஆஸ்திரேலியா சென்று வருகின்றனர்.

How to manage Australia, An Exclusive Guide For Your First Week Abroad

புதிதாக ஆஸ்திரேலியா செல்லும் நபர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு சில விஷயங்களை அறிந்து வைத்து கொண்டால் அது அவர்களின் பயணத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றுவதோடு அதிகப்படியான நிதி செலவையும் குறைக்கும். அந்த வகையில் புதிதாக ஆஸ்திரேலியா செல்வோருக்கு வழிக்காட்டும் வகையில் சில முக்கிய விஷயங்களை நாங்கள் வழங்குகிறோம். அதன் விபரம் வருமாறு:

ஜெட் லேக் பிரச்சனை

நீங்கள் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வரும் பயணியாக இருந்தாலும் கூட ஜெட்லேக் எனும் பிரச்சனையை சந்திக்கலாம். ஜெட்லேக் என்பது தற்காலிக தூக்க பிரச்சனையாகும். இது சர்வதேச அளவில் பயணிக்கும் பயணிகளை பாதிக்கலாம். இதற்கு ஏற்ப நாம் உடனடியாக நம்மை மாற்றி கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு நாட்டுக்கும் நேர வித்தியாசம் உள்ளது. இதனால் இந்தியாவில் பகலாக இருக்கும்போது இன்னொரு நாட்டில் இரவாக இருக்கும். இத்தகைய நேர் எதிரான நாட்டுக்கு செல்லும்போது நேரத்தை கணக்கீட்டு ஓய்வு எடுப்பது மிகவும் சவாலான ஒன்றாகும். ஏனென்றால் கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தில் உள்ள நேரத்தை மாற்றி சமாளிப்பதை போன்று எளிதான காரியம் இதுவல்ல. ஏனென்றால் சர்க்காடியன் ரிதம் எனும் தூக்கம் விழிப்பு சுழற்சியை நாம் சரியாக செய்ய வேண்டும். இதனால் தூக்கத்தைஅந்நாட்டின் நேரத்துக்கு ஏற்ப சரியான அளவில் முறையாக மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு செல்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எளிதாக சமாளிக்க அங்கு சென்று திரும்பியவர்கள் சில பயனுள்ள குறிப்புகளை வழங்கி உள்ளனர். அதன் விபரம் வருமாறு:

நிதானம் அவசியம்

வெளிநாட்டுக்கு செல்வதை நினைத்து அதிக திட்டமிடலை தவிர்த்து நிதானமாக இருங்கள். மேலும் வெளிநாடு சென்ற பிறகு முதல் 2 நாட்கள் தூக்கத்தை முறைப்படுத்த முயற்சிக்க வேண்டும். குறிப்பாக பகல் தூக்கத்தை தவிர்க்க வேண்டும். ஜெட்லேக்கில் இருந்து மீட்டெடுக்க குறைந்தது 3 முதல் 4 நாட்கள் வரை ஒதுக்கீட வேண்டும். இதன் மூலம் அடுத்த நாட்களில் புத்துணர்வுடன் செயல்பட முடியும்.

பொதுபோக்குவரத்து விபரம்

ஆஸ்திரேலியாவுக்கு படிப்பதற்காக சென்றால் முதலில் விமான நிலையத்தில் இருந்து தங்குமிடம், பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிக்கும் செல்லும் வகையில் குறிப்பிட்ட பல்கலைகழக்கங்களில் இருந்து வாகன வசதி உள்ளதா என்பதை சோதித்து பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் Uber அல்லது Ola புக் செய்து பயணிக்கலாம். ஏனென்றால் தனியே காரை வாடகைக்கு எடுத்து பயணிப்பதை விட Uber, Ola சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் ஆஸ்திரேலியாவின் விமான நிலையங்களில் இருந்து பொது போக்குவரத்து வசதிகளும் உள்ளன. பிரிஸ்பேன் நகரை பொறுத்தமட்டில் ஏர்ட்ரெயி்ன சேவை உள்ளது. மேலும் கான்-எக்ஸ்-அயன் எனும் பெயரில் விமான நிலையத்தில் இருந்து நேரிடையாக வீட்டுக்கே செல்வதற்கான வாகன வசதி உள்ளது. இதுதவிர ஸ்கைபஸ் ஷட்டில் சேவை உள்ளது. இந்த சேவையை பயன்படுத்துவதற்கான டிக்கெட்டை விமான நிலையத்தில் உள்ள இயந்திரம் மூலம் பெற்று கொள்ள முடியும். கான்பெரா நகரில் இருந்து விரைவு 3 பஸ் சேவை வசதி உள்ளது. டார்வின் நகரில் இருந்து சிட்டி ஷட்டில் சர்வீஸ் உள்ளது. Mercure Darwin Airport Resort அல்லது Novotel Darwin Airport Hotel இல் தங்கியிருந்தால் இலவச ஷட்டில் சேவை கிடைக்கும். இதுதவிர பஸ் வசதியும் உள்ளது. மேலும் ஹோபார்ட் நகரில் இருந்து ஸ்கைபஸ் ஷட்டில் சேவையும், மெல்போர்ன் நகரில் இருந்து ஸ்கைபஸ் சேவை, கான்-எக்ஸ்-அயன் சேவை உள்ளது. பெர்த் நகரில் இருந்து பஸ் வசதி உள்ளது. சிட்னியில் இருந்து விமான நிலைய இணைப்பு ரயில் சேவை, ஷட்டில் சேவை ரெடி2கோ, மோசியோ மற்றும் பஸ் சேவை உள்ளது.

பொதுபோக்குவரத்துக்கான பயண அட்டைகள்

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நகரங்களிலும் பொது போக்குவரத்துக்கான பயண அட்டைகள் வழக்கத்தில் உள்ளன. அதன்படி பிரிஸ்பேனில் ‛டிரான்ஸ்லிங்க்' Go Card எனும் பெயரிலும், மெல்போர்னில் பிடிபி மைகி எனும் பெயரிலும் சிட்னியில் ஓபல் எனும் பெயரிலும் ரயில்கள், டிராம்கள், பேருந்துகள் மற்றும் படகுகளுக்கான பயண அட்டை நடைமுறையில் உள்ளது. கான்பெர்ராவில் ஆக்ட் மைவே எனும் பஸ் பயண அட்டையும், டார்வின் வடக்கு பகுதிக்கான டாப் அன்ட் கே, ஹோபார்ட் மெட்ரோ டாஸ்மேனியா கிரீன் கார்ட் எனும் பெயரிலும் பஸ்களுக்கான பொது போக்குவரத்து அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன.

சிம்கார்டு முக்கியம்

மேலும் ஆஸ்திரேலியா சென்றவுடன் முதல் நாளில் குறிப்பிட்ட விஷயங்களை செய்ய வேண்டும். அதன்படி புதிதாக சிம்கார்டு கண்டிப்பாக வாங்கி விட வேண்டும். ஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில் Telstra, Optus மற்றும் TPG ஆகியவை தொலைதொடர்பு நிறுவனங்கள் முன்னனியில் உள்ளது. அதோடு நாம் வசிக்கும் இடத்துக்கு எந்த தொலைதொடர்பு சேவை நல்லது என்பதையும் பார்த்து கொள்வது அவசியமாகும். பொதுவாக சிம்கார்டுகளை விமான நிலையங்களில் அல்லது ஆன்லைனில் வாங்கி கொள்ள முடியும்.

உணவு பொருள் - படுக்கை வசதி

மேலும் புதிய நாடுகளுக்கு சென்றவுடன் வசிக்கும் பகுதியில் அருகே உள்ள கடைக்கு சென்று முட்டை, ரொட்டி, உப்பு, மிளகு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும். குறிப்பாக ஜெட் லேக்கில் இருந்து மீளும்போது எளிதாக சமைத்து சாப்பிடும் வகையிலான பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும். மேலும் ஆஸ்திரேலியாவில் வாடகைக்கு தங்கும் இடத்திலேயே மெத்தைகள் வழங்கப்படும். இருப்பினும் தலையணை மற்றும் போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நாம் வாங்கி கொள்ள வேண்டும். இதனால் தலையணை, போர்வைகளை Big W எனும் உள்ளூர் கடைகளில் வாங்கி கொள்ள முடியும். இங்கு டூனா எனும் விரிப்பும் கிடைக்கும்.

குளிர் பிரச்சனை

மெல்போர்ன் போன்ற குளிர்ந்த நகரங்களில் இரவு நேரத்தை சமாளிப்பது மிகவும் சிரமமானது. மெல்போர்னை பொறுத்தமட்டில் கோடைக்கால இரவுகள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இங்கு வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குளிர்காலம் என்றால் இதன் நிலை இன்னும் மோசமாகும். இதனால் குளிரை தாங்கும் உடைகளை கொண்டு செல்வது அவசியமாகும். மேலும் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் குளிர் அதிகம் இருக்கும்.

How to manage Australia, An Exclusive Guide For Your First Week Abroad

வங்கி கணக்கு

வங்கி கணக்கை சீக்கியம் துவங்குவதன் மூலம் எளிதாக அங்கிருந்து வீட்டுக்கு பணம் அனுப்பலாம். இல்லாவிட்டால் வீட்டில் இருந்து நீங்கள் பணம் பெற்று கொள்ள முடிம். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் முக்கிய வங்கிகளாக காமன்வெல்த் வங்கி, என்ஏவி, ஏஎன்இசட், வெஸ்ட்பேக் ஆகியவை உள்ளன.

மெல்போர்ன் இந்தியன் கடைகள்

மேலும் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் உள்ள இந்திய கடைகள் பற்றிய விபரம் வருமாறு: பிரிஸ்பேனை பொறுத்தமட்டில் 498 இப்ஸ்விச் சாலை, அன்னர்லி கியூஎல்டி 4103 என்ற முகவரியில் ஆல் இன் ஒன் இந்தியன் மளிகைக் கடை உள்ளது. இந்திய மசாலா கடை Chermside 763 Gympie Rd, Chermside QLD 4032 என்ற முகவரியிலும், மோனிகா இந்தியன் மளிகை பொருட்கள் எனும் கடை 1/514 பிரன்சுவிக் செயின்ட், போர்டிட்யூட் வேலி QLD 4006 முகவரியிலும் கெட்ரான் மசாலா சென்டர் 169 ஸ்டாஃபோர்ட் சாலை, கெட்ரான் QLD 4031 என்ற முகவரியிலும், இந்திய மசாலா கடை 1349/1351 ஜிம்பீ சாலை, ஆஸ்ப்ளே QLD 4034 என்ற முகவரியிலும் உள்ளது.

கான்பெர்ரா- டார்வின்- ஹோபார்ட்

நியூ ஸ்பைஸ் வேர்ல்ட் ஷாப்ஸ் - இந்தியன் ஷாப் எனும் கடை 28 Colbee Ct, Phillip ACT 2606 முகவரியில உள்ளது. அப்னா இந்தியன் பஜார் 72-74 Oatley Ct, Belconnen ACT 2617 என்ற முகவரியிலும், ஸ்பைஸ் மார்க்கெட் ACT என்பது 1/43/57 டவுன்ஷெண்ட் செயின்ட், பிலிப் ACT 2606 என்ற முகவரியிலும், இந்தியன் மெகா மார்ட் 3/184 க்ராபோர்ட் ஸ்ட்ரீட் கார்னர் மற்றும், ஷீடி எல்என், குயின்பேயன் NSW 2620 எனும் முகவரியிலும் உள்ளது. டார்வின் பகுதியில் தி சில்லி சாய்ஸ் ஷாப் 4/1 எரிக் செயின்ட், அலவா என்டி 0810, மோலி சூப்பர் மார்க்கெட் & இந்தியன் மளிகை 8 மொயில் பிஎல், மொயில் என்டி 0810, காஸ் மசாலா வாங்குரி ஷாப்/2பி வாங்குரி பிஎல், வாங்குரி என்டி 0810, ஆகியவை உள்ளன. ஹோபார்ட் நகரை பொறுத்தமட்டில் ஸ்பைஸ் வேர்ல்ட் ஷாப்/10 பேங்க் ஆர்கேட், ஹோபார்ட் TAS 7000, தி ஸ்பைஸ் ஷாப் 43 Forster St, New Town TAS 7008, யூவர் மினி மார்ட் 11 பேஃபீல்ட் செயின்ட், ரோஸ்னிபார்க் TAS 7018, ஆஸ்திரேலியா மூன்லைட் நேபாளீஸ் & இந்திய மளிகை கடை கடை 3 க்ளெனோர்ச்சி பிளாசா Cooper St, 350 Main Rd, Glenorchy TAS 7010, ஆகிய இடத்தில் உள்ளது.

மெல்போர்ன்

மெல்போர்ன் மளிகைப் பொருட்கள்- மளிகைக் கடை/இந்திய மசாலாக் கடை/மொத்த மளிகைப் பொருட்கள்/மளிகைப் பொருட்கள் விநியோகம் ரிச்மண்ட் 330 விக்டோரியா செயின்ட், ரிச்மண்ட் VIC 3121, லெட்சேவ் வசதி மற்றும் இந்திய மளிகைக் கடை 8 பவர் ஸ்டம்ப், சவுத்பேங்க் VIC 3006, ஸ்பைஸ் லேப் டாக்லேண்ட்ஸ் ஷாப் 2/427 டாக்லேண்ட்ஸ் டாக்டர், டாக்லேண்ட்ஸ் விஐசி 3008, கறி கார்னர் கடை 3/292 விக்டோரியா செயின்ட், வடக்கு மெல்போர்ன் VIC 3051, எக்செல் புட் மார்ட் 136 பீல் செயின்ட், வடக்கு மெல்போர்ன் VIC 3051, அப்னாதேசி இந்தியன் மளிகை பொருட்கள் 1-5/120 ஸ்பென்சர் செயின்ட், மெல்போர்ன் VIC 3000 ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

பெர்த்- சிட்னி நிலவரம்

ஸ்பைசி வேர்ல்ட் 1/30 காலிங்வுட் செயின்ட், ஆஸ்போர்ன் பார்க் WA 6060, ஸ்பைசி டச் யூனிட் 1/181 கில்ட்ஃபோர்ட் ரோடு, மேலாண்ட்ஸ் டபிள்யூஏ 6051, தரமான இந்திய மளிகைப் பொருட்கள் 1/1337 அல்பானி ஹ்வி, கேனிங்டன் WA 6107, இந்திய மளிகைப் பொருட்களின் ஸ்பைசி ஹப் ஹவுஸ் 693 அல்பானி ஹ்வி, கிழக்கு விக்டோரியா பார்க் WA 6101, மஹாராஜா ஸ்டோர்ஸ் 2/145 ஹை ரோடு, வில்லெட்டன் டபிள்யூஏ 6155 ஆகிய இடங்களில் உள்ளது. சிட்னியை பொறுத்தமட்டில், MGM மசாலா - உங்கள் முழுமையான இந்திய மளிகைக் கடை 478-480 கிளீவ்லேண்ட் செயின்ட், சர்ரி ஹில்ஸ் NSW 2010, நியூ இந்தியன் ஹவுஸ் சர்ரி ஹில்ஸ் கடை 1/640 கிரவுன் செயின்ட், சர்ரி ஹில்ஸ் NSW 2010,
யாஷ் இந்தியன் ஸ்பைஸ் 'என்' டிலைட்ஸ் கடை 11/7-17 வாட்டர்ஸ் ரோடு, நியூட்ரல் பே NSW 2089,
காத்மாண்டு கன்வீனியன்ஸ் ஸ்டோர் 330C மில்லர் செயின்ட், கேமரே NSW 2062 ஆகிய முகவரிகளில் உள்ளன.

இதை பின்பற்றினால் ஆஸ்திரேலியாவில் எளிதாக முதல் சில வாரங்கள் சிரமமின்றி வாழ முடியும். வெளிநாட்டுப் பயணத்தை எப்படி எளிதாக்குவது என்பது பற்றி Edudha மூலம் அறிந்து கொள்ளலாம். அதோடு Register today பதிவு செய்து கூடுதல் விபரங்களை பெறலாம்.

English summary
Complete details have been released for hassle-free and hassle-free travel to Australia, the land of kangaroos.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X