ஆரம்பமே 4 விக்கெட்.. மாஸ்டர் பிளான்.. ஸ்மார்ட்டாக ஆடிய கோலி! பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது எப்படி?
சிட்னி: பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை டி 20 லீக் ஆட்டத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
முதலிலேயே அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து பிரஷரில் ஆடி வந்த இந்திய அணி திரில் வெற்றிபெற்றுள்ளது.பாகிஸ்தானுக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
இன்று ஆடும் இந்திய அணியில், கே. எல் ராகுல், கோலி, ரோஹித், சூர்யா குமார் யாதவ் ஆகியோர் கண்டிப்பாக ஆடுவார்கள். இதனால் இந்திய அணியில் பாகிஸ்தானுக்கு எதிராக கே. எல் ராகுல், கோலி, ரோஹித், சூர்யா குமார் யாதவ் , தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஷமி, அஸ்வின், அக்சர், அர்ஷிதீப் சிங் மற்றும் புவனேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

பவுலிங்
இந்த போட்டியில் முதலில் பவுலிங் செய்த இந்திய அணி தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு பிரஷர் கொடுத்தது. இரண்டாவது ஓவரிலேயே பாபர் ஆஸம் டக் அவுட் ஆனார். அதன்பின் ரிஸ்வான் வெறும் 4 ரன்களுக்கு அவுட் ஆனார். அதன்பின் இறங்கிய இப்திகார், மசூத் மற்றும் கொஞ்சம் அதிரடியாக ஆடினார்கள். இரண்டு பேருமே அரை சதம் அடித்து பாகிஸ்தான் அணிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். கடைசியில் வந்த ஷகீன் அப்ரிடி மட்டும் 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.

பேட்டிங்
இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இது கொஞ்சம் எட்டக்கூடிய இலக்குதான் என்பதால் இந்திய அணி நம்பிக்கையாக இறங்கியது. ஆனால் கடந்த உலகக் கோப்பை போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா விக்கெட்டை இழந்தது போல அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ராகுல் 4, ரோஹித் 4 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அதன்பின் சூர்ய குமார் யாதவும் 15 ரன்களுக்கு அவுட் ஆனார்.

விக்கெட்
தேவையின்றி அக்சர் பட்டேலும் 2 ரன்களுக்கு அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 6.1 ஓவரிலேயே 31 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து திணறி வந்தது. இன்னொரு பக்கம் கோலி இறங்கி தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடி வந்தார். பெரிதாக விக்கெட் கொடுக்காமல், தவறான ஷாட் அடிக்காமல் நிதானமாக ஆடி வந்தார். இந்திய அணி 15 ஓவர்கள் வரை நிதானமாகவே ஆடியது. 16 ஓவர் முடிவில் கூட இந்திய அணி 106-4 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

எத்தனை ரன்கள்
அதன்பின் இந்திய அணி கொஞ்சம் கொஞ்சமாக வேகம் காட்ட தொடங்கியது. முக்கியமாக 18வது ஓவரில் இந்திய அணி 17 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணியின் பக்கம் திரும்பியது. இதன்பின் கடைசி இரண்டு ஓவரில் இந்திய அணி 31 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. 19 ஓவரில் கடைசி இரண்டு பந்தில் அடுத்தடுத்து கோலி இரண்டு சிக்ஸ் அடித்தார்.

தினேஷ் கார்த்திக்
அடுத்த ஓவரில் முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து தினேஷ் கார்த்திக் இறங்கி சிங்கிள் அடித்தார். கடைசி 4 பந்தில் 15 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

வெற்றி
அந்த பாலில் ப்ரீ ஹிட் வேறு இருந்ததால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த பாலில் வைட் வேறு போடப்பட்டது. இதில் 3 ரன்கள் சென்றது. அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் அவுட்டான நிலையில், அதன்பின் இறங்கிய அஸ்வினுக்கு முதல் பந்திலேயே வைட் கொடுக்கப்பட்டது. இதனால் ஆட்டம் டிரா ஆனது. இதையடுத்து கடைசி பந்தில் 1 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அஸ்வின் 1 ரன் எடுக்க இந்தியா வென்றது. 53 பந்தில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி என்று கோலி அடித்த 82 ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.
-
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications