சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டீமில் இருக்க கூடாது.. மூத்த வீரருக்கு மொத்தமாக முடிவுரை- கிரிக்கெட் கெரியரை காலி செய்த சாட் பாக்ஸ்

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வீரர் டிம் பெயின் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் பிரேக் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த டிம் பெயின் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக ராஜினாமா செய்தார். இவர் 2017ல் பெண் ஊழியர் ஒருவருக்கு தவறான புகைப்படங்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுக்கு கீழ் பணியாற்றும் பெண் ஒருவரிடம் இவர் பாலியல் ரீதியாக சாட் செய்துள்ளார்.

அதோடு பெண்ணுக்கு நிர்வாண புகைப்படங்களையும் அனுப்பியதாக கூறப்படுகிறது. நிர்வாண வீடியோ தொடங்கி பாலியல் ரீதியாக தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேசி உள்ளார்

என்னது, அமேசான் நதியில் தங்கமா? சல்லடைகளுடன் தண்ணீரில் குதிக்கும் மக்கள்.. பிரேசிலில் பரபரப்பு என்னது, அமேசான் நதியில் தங்கமா? சல்லடைகளுடன் தண்ணீரில் குதிக்கும் மக்கள்.. பிரேசிலில் பரபரப்பு

புகார்

புகார்

இந்த விஷயம் தெரிந்தவுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் இதை விசாரித்து உள்ளது .ஆனால் ஆஸ்திரேலிய போர்ட் விதிமுறைகளை அவர் மீறியதாக நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் இந்த பாலியல் சாட் பூதம் வெளியே கிளம்பி இருக்கிறது. ஆஸ்திரேலிய ஊடகங்கள் சில இவரின் சாட்களை வெளியிட உள்ளது. இதன் காரணமாக தற்போது டிம் பெயின் ராஜினாமா செய்துள்ளார்.

ஆடுவேன் என்றார்

ஆடுவேன் என்றார்


தனது தவறுக்கு பொறுப்பேற்று டிம் பெயின் பதவி விலக முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் நான் ஆஸ்திரேலிய அணியில் நீடிப்பேன். அணியில் தொடர்ந்து ஆடுவேன் என்று டிம் பெயின் குறிப்பிட்டு இருந்தார். அடுத்த வாரம் ஆஷஸ் தொடர் தொடங்க உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான அந்த தொடரில் ஆடுவேன் என்றுதான் டிம் பெயின் குறிப்பிட்டு இருந்தார்.

ஆதரவு

ஆதரவு

இவரின் முடிவிற்கு ஆஸ்திரேலிய வீரர்களும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். டிம் பெயின் அணியில் ஆட வேண்டும். அவர் அணியில் இடம்பெற வேண்டும். கேப்டனாக இல்லை என்றாலும் கீப்பராக டெஸ்ட் தொடரில் அவர் தொடர்ந்து ஆட வேண்டும் என்று கூறி இருந்தனர். இதனால் டிம் பெயின் தொடர்ந்து போட்டிகளில் ஆடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

 ஆனால் திடீர் முடிவு

ஆனால் திடீர் முடிவு

ஆனால் திடீரென தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தற்காலிக பிரேக் எடுப்பதாக டிம் பெயின் அறிவித்துள்ளார். நீண்ட கால பிரேக் எடுக்க போகிறேன். அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் இந்த பிரேக் எடுக்க போகிறேன். இது நிரந்தர ஓய்வு கிடையாது. சில காலத்திற்கு கிரிக்கெட் ஆடுவதில் இருந்து விலகி இருக்க போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

காரணம் 1

காரணம் 1

இதற்கு முதல் காரணம், மன ரீதியாக டிம் பெயின் கஷ்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் காரணமாக, ஊடகங்களில் வரும் செய்திகள் காரணமாக அவர் மன ரீதியான அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஊடகங்களில் வெளியான சில புகைப்படங்கள் காரணமாக இவர் மன அழுத்தத்தில் இருக்கிறாராம். இதற்குத்தான் இந்த பிரேக்.

காரணம் 2

காரணம் 2

இவருக்கு எதிராக புகார் கொடுத்த பெண் தற்போது வழக்கு தொடுத்துள்ளார். இதனால் வழக்கில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் இவர் கிரிக்கெட் ஆட முடியாது. இதனால் இதை காரணமாக காட்டி தற்போது பிரேக் எடுக்கும் முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

Recommended Video

    India vs NZ 1st Test: Latham, Young lead Kiwis strong reply after Southee 5-fer | OneIndia Tamil
    காரணம் 3

    காரணம் 3

    இதெல்லாம் போக பாலியல் வழக்கை எதிர்கொள்ளும் ஒருவர் அணியில் இடம்பெற கூடாது. தேசிய அணியில் அவர் இருக்க கூடாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாகவும் இவர் தற்போது பிரேக் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    Why Tim Paine decides to take a break from Australian cricket? What really happened?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X