பெங்களூர் ஏ.டி.எம். தாக்குதல் ஸ்டைலில் சென்னையில் பெண்ணை தாக்கிய நபர் கைது
சென்னை: பெங்களூர் ஏடிஎம் மையம் தாக்குதல் பாணியில் சென்னையில் பொது விநியோகத் திட்டக் கடையில் பெண்ணிடம் நகை, பணம் பறித்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஆலந்தூரில் காஞ்சீபுரம் கோஆபரேட்டிவ் சொசைட்டி நடத்தும் பொது வினியோக திட்டக் கடை ஒன்றில் வேலை பார்ப்பவர் கோமதி(38). கடந்த மாதம் 19ம் தேதி மாலை அவர் அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு கடைக்கு வந்தார். அப்போது திடீர் என்று இரண்டு பேர் கடைக்குள் நுழைந்து ஷட்டரை மூடினர்.
கத்தியை காட்டி கோமதி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்தனர். மேலும் கடையில் இருந்த ரூ.15,000 ரொக்கத்தையும் திருடிக் கொண்டு கோமதியை தாக்கிவிட்டு ஷட்டரை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்து மயங்கிய கோமதி மயக்கம் தெளிந்ததும் தனது முதலாளிக்கு போன் செய்து விவரம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் கோமதியை தாக்கிய இருவரில் ஒருவரான அன்வருத்தீன்(30) என்பவரை கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அன்வருத்தீன் கூறுகையில், நான் பொது விநியோகக் கடையில் பொருட்கள் வாங்கி சந்தையில் அதிக விலைக்கு விற்று வந்தேன். ஆனால் திடீர் என்று கோமதி பொருட்கள் தருவதை நிறுத்திவிட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது என்றார்.
-
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications