சீர்காழியில் வாய்க்கால்களை தூர் வாராத அரசு... மழை நீரில் மூழ்கிய 1000 ஏக்கர் நெற்பயிர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 31 செமீ மழை பெய்துள்ளதால் அங்கு 1000 ஏக்கர் கணக்கில் பயிர்கள் மூழ்கியுள்ளன. வாய்க்கால்களை தூர் வாராத காரணத்தால் பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நேற்று கனமழை பெய்தது. தமிழகத்தில் சீர்காழியில் 31 செ.மீ. அதிபட்சமான மழை பதிவானது.

1000 acres of crops drown in rain water in Sirkazhi

அங்கு கடந்த 4 ஆண்டுகளாக வறட்சி நிலவி வந்த நிலையில் இந்த மழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எனினும் அங்குள்ள கால்வாய்களை தூர்வாராததால் நேரடி விதைப்பு செய்யப்பட்ட 1000 ஏக்கர் நிலத்தில் மழைநீர் தேங்கியுள்ளது.

இந்த நீரை வடித்து விட கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அவர்கள் வரவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இன்னும் 2 நாள்களுக்குள் இந்த நீர் வடியா விட்டால் பயிர்கள் வீணாகி நஷ்டம் ஏற்படும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As Sirkazhi gets high rainfall in TamilNadu, 100 acres of crops drown in rain water. Farmers concern about the situation.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற