ரூ.1000 மகளிருக்கான மாத உரிமைத்தொகை.. ரேஷன் கடைகளில் பட்டுவாடா.. பணத்தை இப்படித்தான் பெற முடியுமாம்
சென்னை: மகளிருக்கு, 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
பெண்களுக்கு 1000 ரூபாய் அறிவிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதியமைச்சர் அறிவித்தார்.. மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டிருந்தது..
அறிவிப்பு: அந்தவகையில், 1000 உரிமை தொகை வழங்குவதற்கான திட்டம் வரும் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கும் நிலையில், ஜூன் 3ம் தேதி (நாளை) மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் அன்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். பிறகு, செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வரப்போகிறது என்றும் சொல்கிறார்கள்.
1000 ரூபாய் உரிமைத்தொகை யார் யாருக்கு வழங்கப்படும் என்று அரசு தரப்பில் பலமுறை விளக்கங்கள் தரப்பட்டுவிட்டன.. எனினும், யாருக்கெல்லாம் கிடைக்கும், கிடைக்காது என்பது குறித்த சில தகவல்கள் அவ்வப்போது கசிந்தபடியே உள்ளன.

யாருக்கு கிடைக்கும்: நிபந்தனைகள் அடிப்படையில் தகுதியுடையோர்களுக்கு மட்டுமே ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்கும் என்று கூறப்பட்டு வருகின்றன.. அதன்படி, PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்குகீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும் என்கிறார்கள்.. அதேநேரத்தில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானமும் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
வருமானவரி: இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்காது என்று கூறப்படுகிறது.. மேலும் இப்போது, ரூ. 1000 உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் உரிமை தொகையை பெற முடியாது என்றும் அதிகாரிகள் தரப்பில் இருந்து சொல்லப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 1 கோடி மகளிருக்கு மாதம், 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம், வரும் செப்டம்பர் முதல் செயல்படுத்தப்பட உள்ளது.. இதற்கு தகுதியான பயனாளிகள் தேர்வுகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், இதனிடையே, இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது..
மைக்ரோ ஏடிஎம்: மகளிர் உரிமை தொகையை, மாநில தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், ரேஷன் கடைகளில், மைக்ரோ ஏடிஎம் கருவிகள் வாயிலாக பட்டுவாடா செய்ய, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாம்.. அதன்படி, கூட்டுறவு வங்கி கணக்கில் மட்டும், உரிமைத்தொகை செலுத்தப்படும்... அதன் ஊழியர்கள், "மைக்ரோ ஏடிஎம் "எனப்படும் கையடக்க கருவி மற்றும் பண பெட்டகத்துடன் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு மாதம்தோறும் செல்வார்கள்.
கருவி: அந்த கருவியில் பயனாளிகளின், ஆதார் கார்டு நம்பர் உள்ளிட்ட விபரங்கள், ஏற்கனவே பதிவாகி இருக்கும். அவர்கள் விரல் ரேகை பதிவு செய்து அல்லது, டெபிட் கார்டு பயன்படுத்தி உரிமைத்தொகை பணத்தை பெறலாம். இதை செயல்படுத்துவது தொடர்பாக, கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆலோசனையும் நடத்தியிருக்கிறார்களாம்.. இதற்கான அறிவிப்பும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications