மயக்க மருந்து கொடுத்து பள்ளி மாணவி பலாத்காரம்: வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்த இளைஞர்!
பண்ருட்டி அருகே பள்ளி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

கடலூர்: பண்ருட்டி அருகே பள்ளி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த இளைஞர் அதனை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுார் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். 20 வயதான இந்த இளைஞர் பஞ்சு வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது.
[ அட கடவுளே.. நெட்பிளிக்ஸ் பார்த்து அடிமையான பெங்களூர் இளைஞர்.. மனநல மருத்துவமனையில் அனுமதி! ]

மாணவிக்கு மயக்கமருந்து
இருவரும் பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றி திரிந்து வந்துள்ளனர். கடந்த ஏப்ரல், 14ம் தேதி விடுமுறை நாளான அன்று மாணவியை பள்ளிக்கு வரவழைத்த சதீஷ், மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அவருக்கு கொடுத்துள்ளார்.

மாணவி பலாத்காரம்
என்னவென்று தெரியாமல் குடித்த மாணவி மயக்கமடைந்துள்ளார். இதனை பயன்படுத்திய சதீஷ் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வாட்ஸ்ஆப்பில் பரப்பிய இளைஞர்
அதை, மாணவிக்கு தெரியாமல், தன் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்தார். இந்நிலையில், அந்த வீடியோவை சமீபத்தில் தன் நண்பர்களுக்கு 'வாட்ஸ் ஆப்' மூலம் அனுப்பி உள்ளார்.

பெற்றோர் அதிர்ச்சி
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் மளமளவென பரவியது. இதனையறிந்து அதிர்ச்சியடைந்து மாணவியின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர், ஜெயந்தி ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

மருத்துவ பரிசோதனை
இதையடுத்து மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து, மகளிர் காப்பகத்தில் மாணவி தங்க வைக்கப்பட்டார்.

இளைஞர் கைது
இது குறித்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்தனர். 14 வயது பள்ளி மாணவிளை 20 வயது இளைஞர் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து வெளியிட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications