அட கடவுளே.. நெட்பிளிக்ஸ் பார்த்து அடிமையான பெங்களூர் இளைஞர்.. மனநல மருத்துவமனையில் அனுமதி!

பெங்களூரில் நெட்பிளிக்ஸிற்கு அடிமையான இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Netflix-க்கு அடிமையான பெங்களூரு இளைஞர் மருத்துவமனையில் அனுமதி- வீடியோ

    பெங்களூர்: பெங்களூரில் நெட்பிளிக்ஸிற்கு அடிமையான இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

    ஒரு காலத்தில் தியேட்டரில் படம் பார்ப்பது வழக்கமாக இருந்தது. அது அப்படியே டிவியில் பார்ப்பதாக மாறியது. பின் எப்போதாவது லேப்டாப்பில் டவுன்லோட் செய்வதாக அந்த பழக்கம் மாறியது. இப்போது எல்லாம் எல்லா படம் மற்றும் சீரியல்களையும் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட தளங்களில் பார்ப்பது டிரெண்ட் ஆகி இருக்கிறது.

    படம், சீரியல், வீடியோக்களை பார்க்க உதவும் நெட்பிளிக்ஸ்தான் இப்போது இந்தியாவில் டிரெண்ட். பெரிய பெரிய இயக்குனர்கள் கூட, படம் எடுப்பதை விட்டுவிட்டு, நெட்பிளிக்ஸ் சீரியல்தான் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    அடிமையானார்

    அடிமையானார்

    இந்த நிலையில்தான் பெங்களூர் இளைஞர் ஒருவர் நெட்பிளிக்ஸ் சீரியலுக்கு அடிமையானது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவருக்கு 26 வயதுதான் ஆகிறது. தினமும் 18 மணி நேரம் இவர் நெட்பிளிக்ஸ் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

    மருத்துவமனையில் அனுமதி

    மருத்துவமனையில் அனுமதி

    இவர் சிகிச்சைக்காக தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (National Institute of Mental Health and Neurosciences) என்ற பெங்களூரின் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவர்தான் உலகிலேயே நெட்பிளிக்ஸிற்கு அடிமையாகி மருத்துவமனையில் அனுமதி ஆன முதல் நபர் என்று கூறப்படுகிறது.

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    இவருக்கு சுத்தமாக தூக்கம் இல்லாமல் இருந்துள்ளது. அதேபோல் அதீத மனஉளைச்சல், தீவிர பிரமை, அடிக்கடி மயக்கம் உள்ளிட்ட விஷயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் மறதி, கோபம் ஆகியவையும் ஏற்பட்டு இருக்கிறது. இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு அடிமையாகும் போது நடக்கும் விஷயம் ஆகும். இவர் நெட்பிளிக்ஸிற்கு அடிமையான காரணத்தால் இப்படி அவதிப்பட்டுள்ளார்.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    இவரது அடையாளம் வெளியிடப்படவில்லை. இவருக்கு வேலை இல்லாத காரணத்தால் தன்னுடைய மொத்த நேரத்தையும் இதில் செலவளித்துள்ளார். இதன் காரணமாக அவருடைய வாழ்க்கை பிரச்சனையில் இருந்து தற்காலிகமாக அவரால் வெளியேற முடிந்து இருக்கிறது. அதாவது போதைப்பொருள் எப்படி தாற்காலிக வெளியேற்றத்தை கொடுக்குமோ அப்படியே இதுவும் அவருக்கு தற்காலிக வெளியேற்றத்தை கொடுத்துள்ளது. இவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+