For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக 3வது அணி அமையுமா?: நியூஸ் 7 கருத்துக்கணிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. திமுக, அதிமுக உடன் யார் கூட்டணி சேருவார்கள்? யாருடன் யார் கூட்டணி என்று எதிர்பார்க்கத் தொடங்கியுள்ள நிலையில் நியூஸ் 7 தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளும் தனித்துப் போட்டியிட ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று 36.54 சதவிகிதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். திமுக தனித்துப் போட்டியிட வேண்டுமென 32.90 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக தலைமையிலான அணி, ஆகியவற்றின் பலம் பற்றியும் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது நியூஸ் 7 தொலைக்காட்சி.

அதுமட்டுமல்லாது தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு சாத்தியமா? திமுக, அதிமுக வாக்கு வங்கி சரிந்திருக்கிறதா? என்பன உள்ளிட்ட சில கேள்விகளும் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டுள்ளன.

திமுக, அதிமுக தவிர்த்து பிற அணிகளுக்கு அதாவது எந்த அணிகளின் கூட்டணிக்கு பலம் அதிகம் என்று கேள்வி கேட்கப்பட்டதில் தேமுதிகவின் பலத்தை அலசியுள்ளது நியூஸ் 7.

 நிஜமாவே இவ்ளோதானா?

நிஜமாவே இவ்ளோதானா?

இதில் தேமுதிக + விசிக இணைந்தால் 0.80 சதவிகிதம் அதரவு என்றும் இந்த கூட்டணியில் காங்கிரஸ் இணையும் பட்சத்தில் மொத்தமே 0.70 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் இணைந்தால் தேமுதிகவின் வாக்கு பலம் குறைகிறது

 மதிமுக இணைந்தால்

மதிமுக இணைந்தால்

அதேநேரத்தில் தேமுதிக + விசிக + மதிமுக கூட்டணிக்கு மொத்தம் 0.30 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில்

தேமுதிக உடன் பாஜக கூட்டணிக்கு 2.08 சதவிகிதம் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக, திமுக தவிர்த்து தேமுதிகவின் பலம் இதுதான் என்பதுபோல கூறப்பட்டுள்ளது.

 மதிமுகவின் பலம் என்ன?

மதிமுகவின் பலம் என்ன?

மதிமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணிக்கு 50 சதவிகிதம் பேரும்,மதிமுக + தேமுதிக + விசிக கூட்டணிக்கு மொத்தம் 0.30 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதாக நியூஸ் 7 கூறியுள்ளது.

 மநக கூட்டணி

மநக கூட்டணி

மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்கட்சிகள் இணைந்த மக்கள் நலக் கூட்டணிக்கு 0.93 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் விசிக தவிர்த்த வைகோ வாசன் கம்யூனிஸ்டுகள் கூட்டணிக்கு 0.42 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 விசிகவின் பலம் என்ன?

விசிகவின் பலம் என்ன?

விசிக தனித்து போட்டியிலாம் என 0.90 கூறியுள்ளனர். விசிக உடன் காங்கிரஸ் கூட்டணிக்கு 0.20 பேரும், விசிக பாஜக கூட்டணிக்கு 0.06 பேரும், விசிக தேமுதிக பாமக கூட்டணிக்கு 0.13 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வைகோ பாஜக பாமக கூட்டணிக்கு 0.40 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒரே குழப்பமா இருக்கே...!

English summary
Tamil Nadu will go to the polls later this year, probably by mid-April 2016. The election battle will be essentially between the two powerful Dravidian parties – the ruling AIADMK and the opposition DMK.Three, the PWF, the third front floated by CPI(M), continues to fumble without a vibrant leadership or a concrete vision statement for its existence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X