For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் ரயில்வே கேட் காவலரைத் தாக்கிய 17 வயது சிறுவன் - 2 இளைஞர்களுடன் கைது!

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் போதையில் ரயில்வே கேட் காவலரைத் தாக்கிய 17 வயது சிறுவன் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகரிலுள்ள பீளமேடு, சிங்காநல்லூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள எல்.ஜி.தொழிற்சாலைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள ரயில்வே கேட்டில் ஞாயிற்றுக் கிழமை பி.ஸ்ரீனிவாசன் என்பவர் பணியில் இருந்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த மூன்று பேர், தங்களது வாகனத்தை ரயில் தண்டவாளத்தின் மீது ரயில் செல்லும் பாதையில் ஓட்டியுள்ளனர். இதை தடுக்கவந்த ஸ்ரீனிவாசனை தாக்கி விட்டு ரயில் தாண்டவத்தின் மீதே தங்கள் கொண்டுவந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அவருடன் சண்டை போட்டு, காவலர் அறைக்குள் சென்று சண்டை போட்டு அவரை தாக்கியுள்ளனர்.

இதனால் ஸ்ரீனிவாசனால் உரிய நேரத்தில் ரயில்வே கேட்டை மூடமுடியவில்லை, அப்போது அந்த வழியாக வந்த நவயோக் எக்ஸ்பிரஸ் வண்டி சிக்னல் கிடைக்கததால் வண்டி பாதி வழியிலேயே நின்றுகொண்டது. இதைதொடர்ந்து ரயிலில் வந்த பாதுகாப்பு படையினரால் அங்கிருந்து கோவை ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே நிகழ்விடத்துக்கு வந்த இரயில்வே போலீஸார் மூவரையும் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ் காலனியைச் சேர்ந்த ஏ.சதீஸ், கே.சரவணன் இவர்களுடன் மூன்றாவதாக வந்திருந்தவன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி சிறுவன் என்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸார் சதீஸ், சரவணனை பொள்ளாச்சி பாஸ்டல் சிறைக்கும், 17 வயது சிறுவனை சிறார் கூர்நோக்கு இல்லத்துக்கும் அனுப்பி வைத்தனர்.

English summary
3 people arrested for drunk and problem with a railway gate worker in Coimbatore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X