சேலம் அருகே கனமழை.. சுவர் இடிந்து விழுந்ததில் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த 3 பேர் பலி!
கனமழைக்கு கட்டிடம் இடிந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சேலம்: சேலம் அருகே சுறாவளி காற்றுடன் கூடிய கன மழையில் சுவர் இடிந்து விழுந்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
சேலத்தில் நேற்று மாலை திடீர் என சூறை காற்று வீச தொடங்கியது. சிறிது நேரத்தில் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் சேலம் அருகே நெய்க்காரப்பட்டி அருகே உள்ள அடையார் ஆனந்தபவன் உணவு விடுதியின் மேலே அமைக்கபட்டிருந்த அலங்கார சுவர் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. உணவகத்தின் மேல் கூரை தகரத்தினால் போர்த்தப்பட்டிருந்த காரணத்தினால் சுவர் விழுந்தது. இதில் ஓட்டிலின் கட்டிடம் பூமிக்குள் ஒருபாதி இறங்கியது.

அப்போது, உணவு அருந்தி கொண்டிருந்த ஈரோட்டை சேர்ந்த நூருல்அமீது மற்றும் உணவாக ஊழியர் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஈரோட்டை சேர்ந்த சையத் அலி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உணவகம் இடிந்து விழுந்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று, இடிபாடுகளை மீட்டனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது உரிய பாதுகாப்பின்றி கட்டிடம் கட்டப்பட்டதே இந்த விபத்திற்கு காரணமாக அமைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் சேலத்தில் வீசிய சூறை காற்றுக்கு பல இடங்களின் மரங்கள் வேருடன் சாய்ந்தது. மேலும் பல்வேறு இடங்களில் வலுவிழந்த கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், விளம்பர பதாதைகளும் கிழிந்து தொங்கியது,
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications